குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷியாப்தீன் ஷாபிக்கு எதிராக, இன்று குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிக்குகள் உள்ளிட்ட பலர் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன் குருநாகலை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் வைத்தியர் சரத் வீரபண்டாரவை இடமாற்றம் செய்வதற்கு சுகாதார அமைச்சர் முயற்சிப்பதாகத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது

எனவே வைத்தியருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் அரசியல் தலையீடு இன்றி முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வைத்தியர் ஷியாப்தீன் ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றசாட்டுக்கள் தொடர்பில் ஆராய, 6 பேரைக் கொண்ட ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. 6 பேரைக் கொண்ட நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.