கிளிநொச்சி மாவட்டத்தில் 2738 குடும்பங்களைச் சேர்ந்த 9082 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 12766 குடுமப்ங்களைச் சேர்ந்த 40093 பேரும் வரட்சி காரணமாக பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ நிலையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் வரட்சி காரணமாக பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் வரட்சி காரணமாக கோணாவில், அக்கராயன், காஞ்சிபுரம், தட்டுவன்கொட்டி, பூநகரி, கண்டாவளை, ஆகிய பகுதிகளில் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதேவேளை இந்தப்பகுதிகளில் வாழ்வாதாரச் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. Read more
சந்தேகத்துக்கிடமான முறையில் சொத்துச் சேகரித்தமை தொடர்பில், கைதுசெய்யப்பட்டுள்ள குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர், செய்கு சியாப்தீன் மொஹமட் ஷாபி என்ற வைத்தியரின், சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு அருகில் உள்ள லட்சத் தீவுகளுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெக்கிராவ பிரதேசத்தில் நடத்தப்பட்டுவந்த முன்பள்ளி பாடசாலை கட்டடமொன்றின் அறையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, ஒரு தொகை வெடிபொருள்களுடன், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்புடன் தொடர்புடைய, இருவர் இராணுவத்தினரால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தீவிரவாதிகளால் பொசன் போயாத்தினத்துக்கு முன்னர் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்து, இரத்தினபுரி நகரில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த நபர் ஒருவர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மூதூர் கிளிவெட்டி முத்துமாரியம்மன் ஆலயத்தில் தமிழ் பெயரில் ஆலய குருக்களுக்கு உதவியாளராகச் செயற்பட்ட நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் மூதூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து இலங்கைக்கு சீன நாட்டவர்கள் சுற்றுலாவுக்கென விஜயம் செய்வதில் சீன அரசாங்கம் விதித்திருந்த தடையில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலை ஊழியர்கள் 8 பேர் தொடர்பிலான விசாரணைகள் பொலிஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
யாழில் வீதியில் சென்றுகொண்டிருந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் மயங்கி வீழ்ந்து மரணமடைந்த சம்பவம் நேற்று மதியம் கரணவாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.