Header image alt text

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பு மற்றும் அதன் தலைவர் சஹ்ரான் ஹாஸிமுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாகவும் முஸ்லிம் பிரிவினைவாதம் தொடர்பான பிரசங்கங்களை நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டுகளின் கீழ்,

அபிவிருத்தி உதவியாளர் உட்பட ஆறு பேரை, ஹொரவப்பொத்தானயின் கிவுலகட மற்றும் கெப்பத்திகொல்லாவயின் எல்லேவ ஆகிய பிரதேசங்களில் வைத்து, இன்று கைதுசெய்திருப்பதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more

மட்டக்களப்பு, வெல்லாவெளி பகுதியில் பாலம் ஒன்றின் கீழிருந்து ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெல்லாவெளி, காக்காச்சிவெட்டையைச் சேர்ந்த 38வயதான கே. கரிகரன் என்னும் இரு பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் இன்று அதிகாலை வீட்டிலிருந்து சென்றிருந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் உறவினர்களால் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. Read more

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் நேற்று மியன்மாரில் கைது செய்யப்ட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் சுமார் 250 பேரைக் கொல்லப்பட்டனர். 39 வயதுடைய அப்துல் சலாம் இர்ஷாட் மொஹமட் என்ற இலங்கையரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு தற்போது விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. Read more

பலாலி விமான நிலையம் நவீனமயமாக்கப்பட்டு எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் அங்கு நிவாரண விலையில் விமான சேவை வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

முதற்கட்டப் பணிகளின் கீழ் விமான பயண சீட்டுக்கான கட்டணம் வருடம் முழுவதும் நிவாரண முறையில் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இரத்மலான விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு மத்தள, மட்டக்களப்பு, சீகிரிய, பலாலி ஊடாக Read more

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால், பப்புவா நியுகினியில் உள்ள மானஸ் மற்றும் நவுறு ஆகிய தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஏதிலிகள் மத்தியில் தற்கொலை செய்துக் கொள்ளும் நிலைமை அதிகரித்துள்ளது.

வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. 2013ம் ஆண்டு முதல் அவுஸ்திரேலிய அரசாங்கம் பின்பற்றி வருகின்ற ஏதிலிக் கொள்கை கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதன்கீழ் ஏதிலிகள் குறித்த தீவுகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்படுவதால், மனதளவில் கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளாகி, தற்கொலை செய்துக் கொள்ளும் நிலைமை அதிகரித்திருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ். பருத்தித்துறை வீதியில் கோப்பாய் சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கைச் சேர்ந்த 63 வயதான எஸ். செல்வராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் சந்திக்கு அருகில் வீதியை கடக்க முற்பட்டபோதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, படுகாயமடைந்த முதியவரை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் அவர் ஏற்கெனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். Read more

முல்லைத்தீவு கொக்குளாய் மேற்கு பகுதியில் கிராம சேவையாளரை அச்சுறுத்தியமை மற்றும் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் கொக்குளாய் பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மை இன இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 15.05.2019 ம் திகதி முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட கொக்குளாய் மேற்கு 77ஆம் இலக்க கிராம சேவையாளர் பிரிவில் உள்ள கிராம அலுவலகரை கொக்குளாயைச் சேர்ந்த பெரும்பான்மை இன இளைஞர் ஒருவர் அச்சுறுத்தியுள்ளதுடன் அவரின் உந்துருளியின் சாவியை பறித்துக் கொண்டு அவரின் சட்டையைப் பிடித்து இழுத்துள்ளார். Read more

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அமோக வெற்றிபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்,
அவர் அனுப்பிய கடிதத்தில்,

‘தமிழகத்தில் மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றிபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்திற்;கும், அவ் வெற்றிக்கு அடித்தளமிட்ட கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிற்கும் எமது கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) சார்பில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த காலங்களில் ஈழத்தமிழர்களின் துயர் துடைக்க முழுமையாக உழைத்த கலைஞரின் வழிநின்று செயலாற்றி வரும் திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் தலைவரும் எங்கள் மக்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கு தொடர்ந்தும் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டுமென உரிமையுடன் எதிர்பார்க்கின்றோம்.’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கி ஜனாதிபதி கையொப்பமிட்ட கடிதம் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு இன்று வழங்கப்பட்டதை அடுத்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஞானசார தேரர் விடுதலையை முன்னிட்டு அவரை வரவேற்பதற்காக அதிகளவிலான தேரர்கள் உள்ளிட்ட பொதுமக்களும் வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தை சூழ காத்திருந்தனர். நீதிமன்றத்தை அவமதித்ததாக ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டு 2018 ஆகஸ்ட் 8 ஆம் திகதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. Read more

முகத்தை மூடுவது தொடர்பாக அவசர கால சட்ட விதிகளின் கீழ் விதிக்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகள் குறித்து புரியாததன் காரணமாக முகத்தை மூடிய வகையில் சில நபர்கள் பாடசாலைக்கு வருதல், அதே போன்று சில ஆசிரியர்கள் முகத்தை மூடிய வண்ணம் உடை அணிந்துக் கொண்டு வந்ததன் காரணமாக கடந்த சில தினங்களில் பாடசாலைக்கு வந்ததன் காரணமாக பிரச்சினைகள் ஏற்பட்டன.

இந்த நிலைமை தொடர்பில் கூடுதலாக கவனம் செலுத்திய கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இந்த சம்பவங்களின் பாடசாலை முக்கியஸ்தர்கள் தலையிட வேண்டிய முறை மற்றும் பாடசாலைக்கு பிரவேசிக்கும் பொழுது முகத்தை மூடிய வண்ணமான ஆடை மற்றும் பாதுகாப்பு கவசம் அணிவது தொடர்பில் கட்டளைகள் அடங்கிய விஷேட கடிதம் ஒன்றை அனுப்பி வைப்பதற்கு கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். Read more