poduயாழ்ப்பாணத்தில் கடந்த 24ஆம் திகதி நடத்தப்பட்ட எழுக தமிழ் பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொது பலசேனா வவுனியாவில் கண்டனப் பேரணியொன்றை நடாத்தியுள்ளது.

இந்த எதிர்ப்பு கண்டனப் பேரணி இன்றுகாலை 9.30மணிளளவில் வவுனியா மாமடு சந்தியில் இருந்து ஆரம்பமாகி வவுனியா நகர் வரை இடம்பெற்றுள்ளது. இந்தப் பேரணியில் சுமார் 150 பேர் வரை கலந்துகொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானாசார தேரர் இந்த கண்டனப் பேரணிக்கு தலைமை தாங்கியுள்ளதுடன், வவுனியாவைச் சேர்ந்த எவரும் இதில் கலந்து கொள்ளவில்லையென்றும், வெளி இடங்களிலிருந்து மூன்று பேருந்துகளில் அழைத்துவரப்பட்ட பொது பலசேனா அமைப்பின் ஆதரவாளர்களே இதில் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் சிங்கள மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகத் தெரிவித்துள்ள பொது பலசேனா, சிங்களவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தமாறும் வலியுறுத்தியுள்ளது. அதேவேளை இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்றும், அதனால் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் புத்தர் சிலைகளை வைப்பதற்கும், பௌத்த விகாரைகளை அமைப்பதற்கும் உரிமை இருப்பதாகவும், இந்த நடவடிக்கைகளை எவரும் எதிர்க்க முடியாது என்றும் பொது பலசேனா மேலும் குறிப்பிட்டுள்ளது.