Header image alt text

sdஇலங்கையின் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை செயலாளர் நீஷா பிஷ்வாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பு அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் இடம்பெற்றுள்ளது. ஐக்கிய அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள கடற்படைத் தளபதி அங்கு ஏனைய முக்கியஸ்தர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

asமுன்னாள் போராளிகளில் நான்கு பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு இன்று அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் நான்கு பேரையும் விடுதலை செய்வதற்கான உத்தியோகப்பூர்வ நிகழ்வு இன்று வவுனியா பூந்தோட்டம் நலன்புரி முகாமில் நடத்தப்பட்டதாக அமைச்சின் செயலாளர் வேலாயுதன் சிவஞானஜோதி குறிப்பிட்டுள்ளார். ஒரு வருடகால புனர்வாழ்வளிப்பின் போது, ஆறு மாதங்கள் தொழிற்பயிற்சியும், மிகுதி ஆறு மாதங்கள் சமூக உளநலம்சார் பயிற்சிகளும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். Read more

sdfdsபாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதால் இந்தியா இன்று அதிகாலை விமான தாக்குதல் நடத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதில் பாகிஸ்தான் தீவிரவாத முகாமைச் சேர்ந்த 2பேர் கொல்லப்பட்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சக செய்திகள் தெரிவித்துள்ளன. யூரி தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்கள் 17பேர் பலியானார்கள். அப்பொழுது கண்டனம் தெரிவித்து வந்த இந்தியா பாகிஸ்தானை சர்வதேச சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தவே முயற்சிகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது. Read more

ranil-maithriஉத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று நண்பகல் 12.15க்கு நியூசிலாந்து நோக்கிப் பயணமாகியுள்ளார்.

அந்நாட்டுப் பிரதமர் ஜோன் கீ விடுத்த விசேட அழைப்பையடுத்து, மூன்று நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு, பிரதமர் பயணமானார். இந்நிலையில், இலங்கைப் பிரதமர் ஒருவர், நியூசிலாந்துக்கு விஜயம் செய்வது, இதுவே முதன்முறையாகும். Read more

presidential-secretariatபுதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கையை நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகாரம், அதிகாரத்தைப் பகிர்ந்தளித்தல் மற்றும் புதிய தேர்தல்முறை என்பன தொடர்பில் நேற்று கலந்துரையாடப்பட்டதாக புதிய அரசியலமைப்பு ஸ்தாபிப்பு குழுவின் செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார். இதுவரை இந்த குழு 28 தடவைகள் கூடியுள்ளன. எனினும், குறித்த மூன்று காரணிகள் தொடர்பில் இதுவரை எவ்வித இறுதித் தீர்மானங்களும் எட்டப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் 18 துப்பாக்கிகளை வழங்கி வைத்தார் வடமாகாண சபை உறுப்பினர் சிவநேசன்முல்லலைத்தீவு மாவட்டத்தின் 18 கமக்கார அமைப்புக்களுக்கு விவசாய நடவடிக்கையை பாதிக்கும் குரங்குகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் முள்ளியவளை கமநலசேவை நிலையத்தில் இன்று துப்பாக்கிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. Read more

chandrikaஅரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் சம்பந்தமாக கடந்த அரசாங்கங்களுக்கு சந்தேகங்கள் இருந்தாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கடந்த தசாப்த காலத்தில் சர்வதேச சமூகம் தொடர்பில் ஒரு தவறான தோற்றம் அதிகரித்தது என சுட்டிக்காட்டிய அவர், எனினும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அரச சார்பற்ற நிறுவனங்களில் செயற்பாடுகள் சம்பந்தமான அந்தளவுக்கு அழுத்தங்கள் ஏற்படவில்லை எனவும் கூறியுள்ளார். Read more

granadeயாழ்ப்பாணம், பிறவுண் வீதி நான்காம் குறுக்குத் தெரு பகுதியில் உள்ள களஞ்சிய நிலையமொன்றின் காணியில் இருந்து கைக்குண்டுகள் மூன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இன்றுகாலை குறித்த களஞ்சியசாலை பகுதியின் காணியில் அங்கிருந்த நாயொன்று நிலத்தில் குழி தோண்டியுள்ளது. இதன்போது மண்ணினுள் புதையுண்ட நிலையில் கைக்குண்டுகள் தென்பட்டதை அவதானித்த களஞ்சிய பொறுப்பாளர், இது தொடர்பாக உடனடியாக யாழ். பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். Read more

asminயாழ்ப்பாணம் – மாதகல் பகுதியைச் சேர்ந்த சிரேஷ்ட காட்டூன் ஊடகவியலாளர் அஸ்வின் சுதர்சன் உக்ரேன் நாட்டில் ஏற்பட்ட திடீர் காட்டு தீயினால் உயிரிழந்துள்ளார்.

உக்ரேன் நாட்டின் காட்டுப் பகுதியூடாகப் பயணிக்கும்போது வயிற்றுவலி ஏற்பட்டதாகவும் அங்கு போதிய சிகிச்சையின்றி அவர் உயிரிழந்துள்ளார் எனவும், குடும்ப உறவினர்கள் தெரிவிக்கின்றனர். Read more

vali north landமுல்லைத்தீவு மாந்தைக் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள 15 கிராம சேவகர் பிரிவில் 2,032 குடும்பங்களைச் சேர்ந்த 9,396 பேர் மீளவும் குடியமர்த்தப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு கிழக்கிலுள்ள பிராந்திய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே இந்தப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கப்பட்டன.

1,570 புது வீடுகள் கட்டப்பட்டதோடு, மேலும் 914 வீடுகள் கட்டியெழுப்பப்படவுள்ளன. இதைவிட, 455 வீடுகள் பகுதிப் புனரமைப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 2334 வீடுகளுக்கு மலசலகூட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.