Header image alt text

white-vanயாழில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளுக்காக ஆஜராகி, பின்னர் வெளியில் வரும்போது மூவரை, வெள்ளை வேனில் ஏற்றிச் சென்றுள்ளதால், நீதிமன்ற வளாகத்தில் இளைஞர்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. வெள்ளை வேனில் வந்த கொழும்பு குற்றப்பிரிவினர் இன்று இவர்களை பிடித்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. வித்தியாவின் படுகொலை சம்பவத்தின் பின்னர், யாழ். நீதிமன்ற கட்டிடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பான வழக்கு இன்று யாழ். நீதிமன்றில் இடம்பெற்றது. குறித்த வழக்கு விசாரணைக்காக 74பேர் இன்று யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர். இதேவேளை, வழக்கிற்கு சமூகமளிக்காத நபர் ஒருவருக்கு நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், ஏனையோரின் வழக்கு விசாரணையினை எதிர்வரும் நவம்பர் மாதம் 28ம் திகதிக்கு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.சதீஸ்தரன் ஒத்திவைத்துள்ளார். Read more

indiaகாவிரி நீர்ப்பங்கீடு தொடர்பிலான இந்திய உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து தமிழகத்திலும் கர்நாடகாவிலும் பல பகுதிகளில் வன்முறைகள் தொடர்கின்றன. பெங்களூரில் இரண்டு இடங்கில் வன்முறைகளை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, பெங்களூரில் தமிழகத்தைச் சேர்ந்த 50ற்கும் அதிகமான தனியார் பஸ்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. பெங்களூரில் அமுல்படுத்தப்பட்ட 144 தடை உத்தரவு நாளைவரை நீடிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. Read more

india-ministerஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் முன்மொழியப்பட்டுள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பாக, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக பதில் வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். Read more

vannivilankulamமுல்லைத்தீவு, மாந்தைகிழக்கு வன்னிவிளாங்குளம் பகுதியில் இன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றுடன், மோட்டார் சைக்களில் மோதி விபத்துக்குள்ளானதில், குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய் ஒருவர் பலியானதுடன் அவருடைய 14 வயது மகன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பாள்புரம் வன்னிவிளாங்குளத்தைச் சேர்ந்த இரவிக்குமார் இன்பமலர் (வயது 38) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இச்சம்பவத்தின்போது உயிரிழந்துள்ளார். அவரது மகன் இரவிக்குமார் கீதன் (வயது 14) என்பவர் தற்போது சிகிக்சை பெற்று வருகின்றார். இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

accidentயாழ்பாணம் – திருகோணமலை வீதியின் கன்னியா பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று வீதியை விட்டுவிலகி விபத்துக்கள்ளாகியதில் 11பேர் வரையில் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்றுஅதிகாலை 4.30மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்பாணத்திலிருந்து திருகோணமலை பயணித்த போதே குறித்த பஸ் விபத்துக்குள்ளாகியது. விபத்தில் காயமடைந்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.