புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் யாழ். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரிக்கு ஒரு தொகுதி பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுடைய பாராளுமன்ற பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியொதுக்கீட்டில் இருந்தே அலுமாரிகள், மேசைகள் உள்ளிட்ட உபகரணங்கள் பெறப்பட்டு மேற்படி தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளது. Read more