Header image alt text

4கர்நாடகாவில் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் குறித்து இந்திய பிரதமருக்கு ஒரு மகஜரை 7 தமிழ் கட்சிகள்

(தமிழரசு கட்சி, ஈபிஆர்எல்எவ், தமிழர் விடுதலை கூட்டணி, ஈபிடீபி, புளொட், டெலோ, தமிழ் தேசிய மக்கள் முன்னணி) ஆகியன இணைந்து மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயாவின் தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதுவர் உயர்திரு நடராஜனிடம் இன்றுமாலை 8.00மணியளவில் கையளித்துள்ளன.
Read more

1யாழ். கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலையின் ஸ்தாபகர் நினைவு விழாவும் சிறந்த பெறுபேறுகள் பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் 12-09-2016 திங்கட்கிழமை பாடசாலையின் அதிபர் சி.சிவராஜன் அவர்களின் தலைமையில் வித்தியாசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக எம்.காண்டீபன் ((பிரதிக் கல்விப் பணிப்பாளர், வலிகாமம் கல்வி வலயம்) அவர்களும், கௌரவ விருந்தினர்களாக உயர்திரு. சு.சண்முககுலகுமாரன் (உதவிக் கல்விப் பணிப்பாளர், உடுவில் கோட்டம்), பழைய மாணவி திருமதி. நிரஞ்சலா குணராஜ் (கணக்காளர், உணவு, விவசாய ஸ்தாபனம், ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை) ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். Read more

p1390591யாழ். பருத்தித்துறை குரும்பைகட்டி சனசமூக நிலையத்தின் 70வது ஆண்டு நிறைவு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் 11-09-2016 ஞாயிற்றுக்கிழமை திரு. சிவநேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர்கள் எம்.கே. சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், கே.சயந்தன், கே.பரஞ்சோதி ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள். Read more

p1390530யாழ்ப்பாணம் சில்லாலை வடமத்தி கிராம அபிவிருத்தி சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் 11-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.

இந்த ஒன்றுகூடலில் புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். இதன்போது பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டிருந்தனர். Read more

p1390483யாழ்ப்பாணம் சுழிபுரம் மத்தி மாதர் அபிவிருத்திச் சங்கம் மற்றும் பறாளை நாவலர் சன சமூக நிலையம் ஆகியவற்றுக்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் பன்முகபடுத்தப்பட்ட நிதியில் இருந்து மாணவர்களின் கற்றல் செயற்பாட்டுக்கென கணனிகள் கொள்வனவு செய்யப்பட்டு 09.09.2016 வெள்ளிக்கிழமை அன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

பிள்ளைகளின் கணனி அறிவினை மேம்படுத்தும் நோக்கில் இவை வழங்கப்பட்டுள்ளதுடன், அங்கு கணனி வகுப்புக்கள் நடைபெறுவதற்கான ஒழுங்குகளையும் சுழிபுரம் மத்தி மாதர் அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் நாவலர் சனசமூக நிலையத்தினர் செய்துள்ளார்கள். Read more

d-sithadthan-m-pதமிழ் மக்கள் பேரவை எதிர்வரும் 24ஆம் திகதி நடத்தவுள்ள பேரணி பாரிய மக்கள் எழுச்சியாக அமைய வேண்டுமெனத் தெரிவித்துள்ள கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், இதில் அனைத்து தமிழ் மக்களுகம் பங்கெடுக்க வேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்,

தமிழ் மக்கள் தற்போது இக்கட்டான சூழ்நிலையில் உள்ளனர். இத்தருணத்தில் மிகக் கவனமாக, பக்குவமாக காரியங்களை செய்யாவிட்டால் அனைத்தும் தவறாகிவிடும். மீண்டும் அழிவுப் பாதைக்கு மக்களை கொண்டு போகக்கூடாது. அதனைச் செய்யவும் மாட்டோம். அதில் நாம் தெளிவாகவிருக்கின்றோம். தமிழ் மக்கள் விடயத்தில் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும். சில விடயங்களில் விட்டுக்கொடுப்புகள் இடம்பெற்றுள்ளன. சில விடயங்கள் எமக்குத் தெரியாமலே நடைபெறுகின்றன. நாமும் பொறுமையுடன் இருக்கின்றோம். அதனால் எம்மை மற்றவர்கள் பலவீனமானவர்கள் என்று கருதக்கூடாது. Read more

siddharthanசில்லாலை வட மத்தி கிராம அபிவிருத்தி சங்கத்தின் பொதுக்கூட்டமும் மாணவர்களுக்கான கௌரவிப்பும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்வில் கலந்துகொண்ட புளொட் அமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளு மன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆற்றிய உரை,

எமது மக்கள் சுமார் 80 சத­வீ­த­ம­ள­விற்­கு மேல் நம்­பிக்­கை­யு­டனும் எதிர்­பார்ப்­பு­டனும் ஒரு மாற்­றத்­திற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு வாக்­க­ளித்­துள்­ளார்கள். ஆனால், மாற்றம் ஏற்­படவில்லை. அத்­த­கைய சூழலில் மிக மெது­வா­கவே ஓரு சில நட­வ­டிக்­கைகள் நகர்ந்­து­கொண்டு செல்­கின்­றது.
Read more

566அம்பாறை ஆலையடிவேம்பு திருக்கோவில் பிரதேச செயலாக்கப் பிரிவுக்குட்பட்ட 2000 ஆயிரம் ஏக்கருக்கு மேற்றப்பட்ட வயல் காணிகளை, வனவள அதிகாரிகள் நில அளவை செய்து சுவீகரிக்கும் செயற்பாட்டைக் கண்டித்து இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் முன்னால் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள 6 கண்டங்களான தோணிக்கல், டிப்பமடு, பெரியதுலாவை, தோணிக்கல் மேல் கண்டம், தென்கண்டம், வடகண்டம் ஆகிய பிரதேசங்களின் 2000 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட வயல் காணிகளை சவீகரிக்கும் நடவடிக்கையைக் கண்டித்தே ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. Read more

பத்திரிக்கை அறிக்கை

Posted by plotenewseditor on 15 September 2016
Posted in செய்திகள் 

bavanவடக்கில் உள்ள பௌத்த விகாரைகள் அழிக்கப்படுகின்றன. அவை பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற மோதல்கள் வலுப்பெற்று வருகின்ற நிலை தென்னிலங்கையில் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றது.

பௌத்த மதம் சிங்கள மொழிபேசும் இனத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல என்கின்ற போதிலும் இலங்கையில் உள்ள சிங்களவர்களால் பௌத்த விகாரைகளும், புத்த சிலைகளும் நில ஆக்கிரமிப்பின் சின்னமாகவும், தமிழின அழிப்புக்கு அதாரமாகவும் பயன்பட்டு வந்தமையே கடந்தகால கசப்பான வரலாறாகும். Read more

h-a-a-sarathkumaraவட மாகாணத்தின் புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள எச்.ஏ.ஏ சரத்குமார கடமையை பொறுப்பேற்றுள்ளார். இன்றைய தினம் காங்கேசந்துறையில் அமைந்துள்ள அலுவலகத்தில் கடமையேற்றுக்கொண்டார்.

இவரை வரவேற்பதற்காக வட பகுதியில் இருந்து பொலிஸ் உயரதிகாரிகள் பலர் வருகை தந்திருந்தனர். பொலிஸ் மரியாதை அணிவகுப்பை அடுத்து மங்கள விளக்கேற்றப்பட்ட பின்னர் சுப நேரத்தில் கையெழுத்திட்டு தனது கடமையை பொறுப்பேற்றார். இவர் யுத்தம் நிறைவடைந்த பின்னர் 5ஆவது வட மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.