Header image alt text

d-sithadthan-m-pஉரிமைக்காக குரல் கொடுக்க ஓரணியில் திரண்டு “எழுக தமிழ்’ பேரணியை வெற்றிபெறச் செய்வோம் என்று பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவை நடாத்தும் எழுக தமிழ் பேரணி தொடர்பாக அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாளை 24 ஆம் திகதி தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் நாள். இந்தப் பேரணியில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு எமது உரிமைகளை நிலை நாட்டுவதற்கு குரல் கொடுக்க வேண்டும்.  Read more

p1400090யாழ். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் நிறுவுநர் நாளும் பரிசளிப்பு விழாவும் நேற்று (22.09.2016) வியாழக்கிழமை காலை 9.00மணியளவில் கல்லுரியின் பிரதான மண்டபத்தில் கல்லுரியின் அதிபர் திரு. கு.ரவிச்சந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டதோடு, சிறப்பு விருந்தினர்களாக அருணாசலம் அகிலதாஸ் (பிரதிக் கல்விப் பணிப்பாளர், யாழ்ப்பாண கல்வி வலயம்), திருமதி பாலசவுந்தரி சிவகுமார் (லண்டன் பழைய மாணவர் சங்க உறுப்பினர்), ஆறுமுகம் இராசநாயகம் (ஓய்வுபெற்ற இலங்கை வங்கியாளர், பழைய மாணவர்), தம்பு நமசிவாயம் பஞ்சாட்சரம் (ஓய்வுநிலைய ஆங்கில ஆசான், பழைய மாணவர்) ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். Read more

tharunjith-singh-santhuஇலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகராக தரன்ஜித் சிங் சாந்து (53) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசு நேற்று பிறப்பித்துள்ளது. கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் உயர்ஸ்தானிகராக பணியாற்றிய வை.கே. சின்ஹாவின் பதவிக்காலம் அண்மையில் முடிவடைந்தது.

இதைத் தொடந்து, இலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகர் நியமிக்கப்பட்டுள்ளார். 1963 ஜனவரி 23ஆம் திகதி பிறந்த தரண்ஜித் சிங் சாந்து, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும் பூர்த்தி செய்து, 1988ஆம் ஆண்டு இந்திய வெளிவிவகார துறையில் இணைந்துகொண்டுள்ளார். Read more

anurathapuram-jailஅனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் 20 பேர் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தமது வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் கடந்த புதன்கிழமை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். தம்மீதான சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் இந்த தமிழ் அரசியல் கைதிகள் வலியுறுத்தியுள்ளனர். Read more

partyஐ.நா பொதுச்சபையின் 71 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் முதல் பெண்மணி மிச்செல் ஒபாமாவைச் சந்தித்தார். ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்கும் உலகத் தலைவர்களுக்கு, கடந்த 20ஆம் திகதி, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா விருந்துபசாரம் அளித்தார்.

லொட்டே நியூயோர்க் விடுதியில் நடந்த இந்த விருந்துபசாரத்தின் போதே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அமெரிக்க அதிபர் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், ஒபாமா தம்பதிகளுடன் இணைந்து ஒளிப்படமும் எடுத்துக் கொண்டார். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பதவிக்காலம், இந்த ஆண்டுடன் நிறைவடையவுள்ள நிலையில், அவர் உலகத் தலைவர்களுக்கு அளித்த இறுதி விருந்துபசாரம் இதுவாகும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

thamil-makkal-peravaiஎமது உணர்வுகளையும் மன வேதனைகளையும் சர்வதேச சமுகத்திற்கு உணர்த்த எழுக தமிழ் பேரணியில் அணிதிரளுங்கள் என தமிழ் மக்கள் பேரவையினர் அழைப்பு விடுத்துள்ளனர். எழுக தமிழ் பேரணி இரண்டு இடங்களில் ஆரம்பமாகவுள்ளது.

பல்கலைக்கழக முன்றலில் இருந்தும் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலிருந்தும் பேரணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இவை பலாலிவீதி இலுப்பையடிச் சந்தியில் ஒன்றாக இணைந்து காங்கேசன்துறை வீதியினூடாக சென்று வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் உள்ள திறந்தவெளியில் நிறைவு பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். Read more

seetharamanஇந்திய வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், எதிர்வரும் 26ஆம்திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 26ஆம் திகதி இலங்கை வரவுள்ள அவர், 28ஆம் திகதி வரை இங்கு தங்கியிருப்பார்.

இலங்கையின் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவை, இந்திய வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், வரும் 27ஆம் திகதி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்தச் சந்திப்பின்போது, இந்தியா – இலங்கை இடையே செய்துகொள்ள திட்டமிடப்பட்டுள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு குறித்து விரிவாக கலந்துரையாடப்படும் என்று தெரியவருகிறது. Read more

suicide-kitவவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தா பாடசாலையின் வளாகத்திலிருந்து தற்கொலை அங்கியும் அலைபேசி சார்ஜரும் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

அப்பாடசாலைக்கு புதிய கட்டடம் அமைப்பதற்கான பணிகள் ஒப்பந்தக்காரர்களால், நேற்று மேற்கொள்ளப்பட்டன. நிலத்தை ஆழமாக்க முற்பட்டபோது வெடிப்பொருட்களை கண்டுள்ளனர். உடன் வவுனியா பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, அங்கு விரைந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சோமரத்தின விஜயமுனி தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர். Read more

brigadier-roadமுல்லைத்தீவு தண்ணீருற்றில் இருந்து கேப்பாப்பிலவு பிரதானவீதி ஊடாக புதுக்குடியிருப்புக்கு செல்லும் பாதைக்கு பிரிகேடியர் சமரசிங்க வீதி என பெயர்ப்பலகை மாட்டப்பட்டுள்ளது.

தற்போது அமைக்கப்பட்டுள்ள கேப்பாப்பிலவு மாதிரிக் கிராமத்தை அடையும் வீதிக்கே மேற்படி பெயர் சூட்டப்பட்டுள்ளது. இராணுவத்தினரின் முக்கிய பிரிகேடியர் நிலை தளபதிகள் குறித்த வீதிவழியே அடிக்கடி பயணங்களை மேற்கொள்கின்றனர். குறித்த பிரதான வீதியில் இருந்து உட்செல்லும் வீதிக்கே பிரிகேடியர் சமரசிங்க என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

adssதங்களது பிள்ளைகள் படிக்கும் பாடசாலைகளுக்குச் செல்லும் தாய்மார்கள், கட்டாயமாக சேலை அணிந்திருக்க வேண்டுமென்று, அப்பாடசாலைகளின் அதிபர்களால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை, உடனடியாக நீக்கிக்கொள்ளுமாறு, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தால், அதிபர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், பாடசாலை அதிபர்கள் மற்றும் உயரதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் சுற்றறிக்கையொன்றை அனுப்புமாறு, கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளதாக, அமைச்சர் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, ‘கொழும்பு உள்ளிட்ட, நகரப் பிரதேசங்களைச் சேர்ந்த பெரும்பாலான தாய்மார்கள், தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். Read more