Header image alt text

சர்வதேச விசாரணையை கோரி போராட்டங்கள்-

dfddஇலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளுக்காக சர்வதேச தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில், வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் உள்ளிட்ட பர் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் வரையிலான நடைபயண பேரணியில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில், சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் போராட்டமும் முன்னெடுக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம், இன்று வவுனியாவில் நடைபெற்றது. இதற்கிடையில், உள்நாட்டு விசாரணைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்திலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

வடக்கு அமைச்சரவையை மாற்றியமைக்க வேண்டும்-

npc2_CIவடக்கு மாகாண சபையின் அமைச்சரவையை மாற்றியமைக்குமாறு, சபையின் பிரதி அவைத் தலைவர் ம.அன்ரனி ஜெகநாதன், வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரைக் கோரியுள்ளார். இது தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபை அமைக்கப்பட்டு 2 வருடங்கள் ஆகின்றன. சபையின் அமைச்சரவையை முழுமையாக மாற்றியமைக்கவேண்டும். இது வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பலரின் வேண்டுகோளாக இருக்கின்றது. இதனை ஒவ்வொரு உறுப்பினர்களிடமும் நேரடியாகக் கேட்டு அறிந்து கொள்ளலாம். மேலும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவேண்டும். இந்த விடயங்களைக் குறிப்பிட்டு, பிரதி அவைத்தலைவர் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார். கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு முகவரியிடப்பட்டுக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவற்றின் பிரதிகள், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

30வது ஐ.நா மனித உரிமைகள் மாநாடு-

unஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 30வது மாநாடு நாளை ஜெனீவாவில் ஆரம்பமாகிறது. இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றங்கள் குறித்த நிபுணர்களின் அறிக்கை இந்த மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ள நிலையில், இது இலங்கைக்கு முக்கியமான மாநாடாக அமைகிறது. இதில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான உயர்மட்டக் குழு ஒன்று ஜெனீவா சென்றுள்ளது. நாளைய மனித உரிமைகள் மாநாட்டின் ஆரம்ப உரையின்போதும், இலங்கை குறித்த விடயங்களை மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹ{சைன் முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், இலங்கை சார்பில் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நாளைய கூட்டத்தின்போது விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக கூறப்படுகிறது. இதன்போது இலங்கையின் உள்நாட்டு பொறிமுறைக்கூடான விசாரணை தொடர்பான முழுமையான விளக்கமளிப்பை அவர் முன்வைப்பார் என்று கூறப்பட்டுள்ளது. Read more

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தொடர்ந்து அழுத்தங்களை கொடுப்போம்-பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன்-

sithadthanதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து புதிய அரசுக்கு தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுப்போம் என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் சர்வதேச கைதிகள் தினமாகையால் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டிருந்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

கடந்த அரசு தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் சிறைகளிலே அடைத்து வைத்து வருத்தி வந்தது. இந்த அரசாங்கமாவது தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும். யுத்தம் நிறைவுக்கு வந்து ஆறு வருடங்கள் கடந்திருக்கின்றது. உண்மையில் இந்தக் காலப்பகுதிக்குள்ளேயே இவர்கள் அனைவருமே விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ் மக்கள் அனைவரும் மாற்றத்தை வேண்டி இன்றுள்ள ஜனாதிபதிக்கு பெரும்பான்மையாக வாக்களித்தார்கள். இதனடிப்படையில் இன்று ஒரு மாற்றம் வந்திருக்கின்றது. அரசு மாறியிருக்கின்றது. Read more

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்-

sfdffசர்வதேச கைதிகள் தினத்தினை முன்னிட்டு இன்று யாழ். நகரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தேசிய அரசாங்கமே அகிம்சை போராட்டத்திற்கு மதிப்பளித்து தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய் அரசே, நல்லாட்சி அரசாங்கமே அரசியல் கைதிகளை விடுதலை செய்து நல்லிணக்கத்தை வெளிப்படுத்து, 23 வருட சிறை இருப்பு இன வன்முறையை தோற்றுவிக்கும், இரும்புச் சுவருக்குள் இருக்கும் எமது உறவினை இயல்பாக வாழ விடுதலை செய் போன்ற பதாதைகளை தாங்கியவாறு இன்றுகாலை 10மணியளவில் யாழ். மத்திய பேரூந்து நிலையத்தில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்களான ஆனோல்ட், கஜதீபன், சுகிர்தன், பரஞ்சோதி மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தொடரும் நடைபயணம்-

dfddசர்வதேச விசாரணையை வலியுறுத்தி கடந்த 10ஆம் திகதி கிளிநொச்சி நகரிலிருந்து ஆரம்பமான நடைபயணம் இன்று 3ஆம் நாள் பளையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் ஆணையிறவிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பயணம் பளையுடன் நிறைவுபெற்றது. இந்நிலையில் மூன்றாவது நாள் பயணம் இன்றுகாலை 9 மணியளவில் பளையிலிருந்து யாழ். நோக்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய பயணத்தில் வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோருடன், காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் உள்ளிட்டோரும் பங்கெடுத்துள்ளனர்.

மூன்றாவது நாளாக ஆரம்பாகியுள்ள நடைபவனியின் போது கருத்து தெரிவித்த சிவாஜிலிங்கம் அவர்கள், சர்வதேச விசாரணையை வலியுறுத்திய மூன்றாம் நாள் பயணம் பளையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இன்றைய நடைபயணத்தின் முடிவு கொடிகாமம் பகுதி என தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அனந்தி சசிதரன் அவர்கள், Read more

புதிய அரசுடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பு-கனடா-

canadaஇலங்கையின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாக கனடா தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைத் தொடர்ந்தும் வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாகவும் கனடா அறிவித்துள்ளது. கனடாவிற்கான புதிய இலங்கை உயர்ஸ்தானிகர் அஹமட் ஜவாட் மற்றும் கனேடிய ஆளுனர் நாயகம் டேவிட் ஜோன்ஸ்டன் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கையில் நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் உட்பட இலங்கையின் தற்போதைய வளர்ச்சி குறித்து உயர்ஸ்தானிகர் ஜவாட், கனேடிய ஆளுனருக்கு தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், வரலாற்று ரீதியாக இரு நாடுகளிடையே மிகச்சிறந்த உறவு காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அச்சுவேலி பகுதி வாகன விபத்தில் 32 பேர் காயம்-

accidentssssயாழ். அச்சுவெளி ஆவரங்கால் பகுதியில் இன்றுமுற்பகல் 10மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 32 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் 04 சிறுவர்களும் காணப்படுவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். பருத்திதுறையிலிருந்து யாழ் நோக்கி பயணித்த பஸ்சுடன் யாழ் நகரிலிருந்து பருத்திதுறைக்கு பயணித்த லொறி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வேகக்கட்டுப்பாடுகளை மீறி வாகனம் செலுத்தப்பட்டதனால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் பொஸிசார் கூறுகின்றனர். இதன்போது லொறிக்குள்ளே காணப்பட்ட பலசரக்கு பொருட்கள் முற்றாக சேதமடைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோஸி சேனநாயக்க பிரதமரின் ஊடகப் பேச்சாளராக நியமனம்-

rosyஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனாநாயக்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, பிரதமர் அலுவலகத்தின் துணைத் தலைவியாகவும் ரோஸி சேனநாயக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. ரோஸி சேனாநாயக்க, கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் குழு மோதல், ஏழு பேர் காயம்-

clash oneகொழும்பு, வாழைத்தோட்டப் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இன்று பகல் இடம்பெற்ற மோதலில் மூன்று பெண்கள் உட்பட ஏழு பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களுள் பெண்ணொருவர், அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. சில காலங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோதல் சம்பவம் ஒன்றிற்கு பழிதீர்க்கும் வகையில் இந்த குழுக்கள் இன்றையதினம் மோதலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழரசு கட்சியின் குழு ஜெனீவா பயணம்-

sumandran MPஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, இலங்கை தமிழரசு கட்சியின் குழு ஒன்று ஜெனீவா சென்றுள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் தலைமையில் இந்த குழு அங்கு சென்றிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை தமிழரசு கட்சியின் சட்டத்தரணிகள் குழு ஒன்றும் உடன்சென்றிருப்பதாக அத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், இந்த குழுவுடன் இணையாமல், வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் எதிர்வரும் 20ம்திகதி ஜெனீவா செல்லவிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் சிலிண்டர் வெடித்துச் சிதறி 82 பேர் பலி-

fgfஇந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உணவகம் ஒன்றில் சிலிண்டர் வெடித்ததில் 82 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றுகாலை சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இதனால் உணவகக் கட்டிடம் முழுவதும் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. அருகாமையில் உள்ள சில கட்டிடங்களும் இடிந்து வீழ்ந்ததால், கட்டிட இடிபாடுகளுக்குள் ஏராளமான மக்கள் சிக்கிக்கொண்டனர். ஆரம்பத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 25 என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 82 ஆக அதிகரித்துள்ளது.

வவுனியாவில் மகாகவி பாரதியாரின் நினைவுதினம் அனுஷ்டிப்பு-(படங்கள் இணைப்பு)

IMG_1507வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கம், தமிழ் விருட்சம், கலை, இலக்கிய நண்பர்கள் வட்டம் இணைந்து ஏற்பாடு செய்த, மகாகவி பாரதியாரின் நினைவுதினம் இன்றுகாலை (11.09.2015) 8.30மணிக்கு குருமண்காடு சந்தியில் அமைந்துள்ள பாரதியார் சிலையடியில் தமிழ்மணி அகளங்கன் தலைமையில், சிறிசங்கர் (பாபு)அனுசரணையில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வில் பாரதியின் பெருமைகளை பறைசாற்றும் கவிதையினை குரும்பையூர் ஜங்கரன் வழங்கியதுடன், தமிழ்மணி அகளங்கனின் “செந்தமிழும் நாப்பழக்கம்” எனும் நூலும் வெளியிடப்பட்டது. இவ் நிகழ்வில், வவுனியாவில் கம்பீரமாய் காட்சிதரும் சிலைகளை தமது காலத்தில் நிறுவி, தமிழையையும் சைவத்தையும் காத்த பெரியோர்களின் காவலன்கள் என வன்னியில் அழைக்கப்படும், வவுனியா நகரசபையின் முன்னாள் நகரபிதாவும், வட மாகாண சபை உறுப்பினருமான திரு ஜி.ரி.லிங்கநாதன், உப நகரபிதாவும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) மாவட்ட இணைப்பாளருமான திரு க,சந்திரகுலசிங்கம்(மோகன்) ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. Read more

வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்களால் உதவிகள் வழங்கிவைப்பு-(படங்கள் இணைப்பு)

IMG_15432015ம் ஆண்டிற்கான மாகாணசபை உறுப்பினர்களின் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து வட மாகாணசபை உறுப்பினர் திரு. ஜி.ரி லிங்கநாதன் அவர்களினால் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் (11.09.2015) வவுனியா கால்நடை அபிவிருத்தி திணைக்களத்தில், பணிப்பாளர் வைத்திய கலாநிதி கனரத்தினம் தலைமையில், பயனாளிகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இவ் நிகழ்வில் பசு மாடுகளினை 17 பயனாளிகளும், நல்லின ஆடுகளை 7 பயனாளிகளும், கோழிகள் 41 வீதம் 42 பயனாளிகளும் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வுகளில் வட மாகாண சபை உறுப்பினருமான திரு ஜி.ரி. லிங்கநாதன் அவர்களுடன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) வவுனியா மாவட்ட இணைப்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவுமாகிய திரு. க.சந்திரகுலசிங்கம் (மோகன்), தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், பொருளாளர் திரு த.நிகேதன், ஊடக இணைப்பாளர் திரு வ.பிரதீபன் அவர்களும் கலந்துகொண்டு உதவிகளை வழங்கிவைத்தார்கள்.  Read more

சர்வதேச விசாரணை அவசியமில்லை-ருவன் விஜேவர்தன-

ruwanஇறுதிகட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணைக்கு அவசியமில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய அமெரிக்காவும் இந்த நிலைப்பாடு தொடர்பில் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றபோதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனஇந்த விடயத்தை கூறியுள்ளார். வெளிவிவகார பிரதியிமைச்சர் கலாநிதி ஷர்சடி சில்வா, பல்கலைக்கழக கல்வி ராஜாங்க அமைச்சர் மொகான் லால் கிரேரு ஆகியோரும் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச விசாரணையை வலியுறுத்திய நடை பயணம் தொடர்கிறது-

sivajiசர்வதேச விசாரணையை வலியுறுத்தி கிளிநொச்சி நகரில்நேற்று ஆரம்பமான நடை பயணம் இன்று பளையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது. இன்றைய 2ஆம் நாள் பயணம் ஆணையிறவில் ஆரம்பமானது. சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் இந்த பயணத்தில் வட மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். முள்ளிவாய்க்காலில் தமது உறவுகளை இழந்தவர்களும், காணாமற்போனவர்களின் உறவினர்களும் இந்த நடைப் பயணத்தில் இணைந்துள்ளனர். கிளிநொச்சியில் நேற்றைய தினம் ஆரம்பமான இந்த நடை பயணம், யாழ். நல்லூரில் நிறைவு பெறவுள்ளது. இந்த பாதையாத்திரை கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் வரையில் ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ளது.

நல்லிணக்க முயற்சிகளுக்கு அமெரிக்கா ஆதரவு-

americaஇனங்களிடையேயான நல்லிணக்கம் நோக்கிய இலங்கையின் முயற்சிகளுக்கு கொழும்பிலிலுள்ள அமெரிக்க தூதரகம், அமெரிக்க அரசாங்கம் ஆகியவற்றின் ஆதரவு உண்டென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெஷாப் தெரிவித்துள்ளார். கண்டி மகாநாயக்க தேரர்களை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துதெரிவித்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். தேரர்களுடன் சந்தித்துப் பேச்சு நடத்தியபோது இலங்கையின் கலாசாரம், பௌத்தம் பற்றி கூடுதலாக அறிந்து கொண்டேன். பௌத்த சமய அறிஞர்களுடன் நெருக்கமான உறவை வைத்திருக்க விரும்புகின்றேன். நல்லிணக்கம், ஒற்றுமைப்பட்ட ஜனநாயக, செழிப்பான, சுதந்திரமான சகலருக்குமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு, அமெரிக்கத் தூதரகமும், அமெரிக்காவும் உதவத் தயாராக இருக்கின்றன என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

லும்பினிக்கான பயணத்தைத் தவிர்க்குமாறு ஆலோசனை-

lumbiniமறு அறிவித்தல் கிடைக்கும்வரை லும்பினிக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு இலங்கையர்களிடம் நேபாலிலுள்ள இலங்கைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியர்களின் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் காரணமாக அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளதால் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. லும்பினியில் தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த சுமார் 300 யாத்திரிகர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறியுள்ளதாகவும் இவர்கள் தற்போது இலங்கைக்கு திரும்பிக் கொண்டிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், லும்பினிக்கு செல்வதற்கான பயண ஆலோசனைக்கும், லும்பினி பகுதிக்கு பயணித்துக் கொண்டிருப்பவர்களுடன் தொடர்புகொள்வதற்கு 0097714720623, 0097714720213 போன்ற இலக்கங்களுடன் இணைப்பை ஏற்படுத்துமாறு இலங்கைத் தூதரகம் மேலும் அறிவித்துள்ளது.

சஷி வீரவன்ச குறித்த விசாரணை நிறைவு-

sashiசட்டவிரோதமாக விதிமுறை மீறி இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச தொடர்பான விசாரணை நிறைவு பெற்றுள்ளது. இது தொடர்பில் குற்றப் புலனாய்பு பிரிவினர் இன்று (கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். அதன்படி, விசாரணை அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கும்வரை விசாரணையை ஒத்திவைக்குமாறு குற்றப் புலனாய்வு பிரிவினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வழக்கு விசாரணை அடுத்த வருடம் ஜனவரி 29ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரிக்கை-

caffeபல வருட காலமாக வழக்கு எதுவுமின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு கபே மற்றும் இலங்கை மனித உரிமை கேந்திரம் ஆகியன கோரிக்கை விடுத்துள்ளன. சட்டமா அதிபர், ஜனாதிபதி உள்ளிட்ட அனைத்து அரசியல் தலைவர்களும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கபே மற்றும் இலங்கை மனித உரிமை கேந்திரம் ஆகிய அமைப்புக்கள் கேட்டுள்ளன. இந்த அமைப்புகளின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில், பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வழக்கு தொடர்ந்து, தொடராது 273 அல்லது அதற்கும் அதிகமானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 6,7 வருடங்களாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளபோதும் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. Read more

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நடைபயணம் ஆரம்பம்-

555இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை நடத்துமாறு வலியுறுத்தும் நடைபயணம் கிளிநொச்சியில் இன்று ஆரம்பமானது. கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பமான இந்த நடை பயணத்தில் வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். முள்ளிவாய்க்காலில் தமது உறவுகளை இழந்த பலரும் இந்த நடைப் பயணத்தில் கலந்து கொண்டிருந்தனர். கிளிநொச்சியில் ஆரம்பமான இந்த நடை பயணத்தின் இன்றைய பயணம் ஆனையிறவில் நிறைவுற்றுள்ளது. சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட இந்த நடை பயணம் ஆனையிறவில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி நாளை பயணிக்கவுள்ளது.

யாழ்ப்பாணம், மன்னாரில் கையெழுத்து வேட்டை-

3444இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் வகையில் கையெழுத்துப் பெறும் நடவடிக்கை யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் இன்று நடைபெற்றது. “சர்வதேச மனிதாபிமானம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் செயன்முறைக்கான பொறிமுறையை ஸ்தாபிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்துகின்றோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இதன்போது கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டன. சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைகளுக்கான தமிழர் செயற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து வேட்டை யாழ்ப்பாணத்தில் 7ஆவது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று சாவகச்சேரி நகரில் கூடிய பலர் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கையெழுத்திட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மூன்று குடியியல் உறுப்பினர்கள் பரிந்துரைப்பு-

sddfஅரசியலமைப்பு சபைக்கான மூன்று குடியியல் உறுப்பினர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். சர்வோதய இயக்க தலைவர் ஏ.டி ஆரியரத்ன, கலாநிதி ராதிகா குமாரசுவாமி மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சிப்லி அசீஸ் ஆகியோரே பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களை அரசியலமைப்பு சபைக்கு உள்ளீர்க்க எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வின்போது யோசனை முன்வைக்கப்படவுள்ளது. இதில் ஏ.டி ஆரியரத்ன மற்றும் ராதிகா குமாரசுவாமி, 100 நாள் அரசாங்க வேலைத்திட்டத்தின்போதும் அரசியலமைப்பு சபைக்கான குடியியல் உறுப்பினர்களாக பரிந்துரை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பேரவைக்கான ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவும், பிரதமரின் பிரதிநிதியாக அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதியாக ஜே.வீ.பியின் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனின் பிரதிநிதியாக எம்.ஏ சுமந்திரன் நியமிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.

அமைச்சரவை அதிகரிப்பை எதிர்த்து மனுத் தாக்கல்-

courts (2)அரசாங்கத்தின் அமைச்சரவை சட்டவிரோதமானது என உத்தரவிடும்படி கோரி உயர் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி அருண லக்சிறி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். மனுவின் பிரதிவாதிகளாக ஜனாதிபதி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். 19வது திருத்தச் சட்டத்தின்படி அமைச்சரவை 30ஆக இருக்க வேண்டும் என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவை 30ற்கும் மேலாக அதிகரித்துள்ளதென மனுதாரர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே இது சட்டவிரோதமானதெனவும் அரசியல் யாப்பை மீறியுள்ளதாகவும் அறிவிக்கும்படி மனுதாரர் இதன் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு – குருணாகல் வீதி விபத்தில் நால்வர் பலி-

minuwangodaகொழும்பு – குருணாகல் வீதியில் மினுவாங்கொட யாகொடமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலத்த காயங்களுக்குள்ளான 6பேர் கம்பஹா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து வந்த டிபன்டர் ரக வாகனமொன்று, தனியார் பஸ்ஸை முந்திச் செல்ல முயன்றபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. டிபென்டரில் சென்றோர் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவர்கள் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன