ranil-maithriபிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாரம் நியூஸிலாந்துக்கு விஜயம் செய்யவிருப்பதாக நியூசிலாந்து நாட்டுப் பிரதமர் ஜோன் கீ அறிவித்துள்ளார்.

இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், பிராந்தியப் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக ஜோன் கீ சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இலங்கைப் பிரதமரின் இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார். இதன்படி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை நியூசிலாந்து செல்கின்றார். இலங்கை பிரதமர் ஒருவர் நியூஸிலாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வது இதுவே முதற்தடவையாகும். கடந்த பெப்பரவரி மாதம் இலங்கைக்கான விஜயத்தை நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ மேற்கொண்டிருந்தார். இதன்போது நியூஸிலாந்துக்கு வருகை தருமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனடிப்படையில் பிரதமர் ரணில் நியூஸிலாந்து செல்கின்றார்.