இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக்காலமாகப் பௌத்த மதகுருமார்கள் உட்பட கடும் போக்கு பௌத்தர்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு முஸ்லிம் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியை நேரில் சந்தித்து கேட்டுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக்காலங்களில் இடம் பெற்ற கடும் போக்கு பௌத்தர்களின் இன ரீதியான செயல்பாடுகள் தொடர்பாக ஆறு அமைச்சர்கள் , மூன்று இராஜங்க அமைச்சர்கள் , இரு துணை அமைச்சர்கள் உள்ளிட்ட 21 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களினாலும் ஒப்பமிடப்பட்ட மனுவொன்றும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. Read more








