இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடா தமது நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக இந்தோனேசிய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏ.எம்.பசீர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் 6ம் 7ம் திகதிகளில் ஜகார்த்தாவில் நடைபெறவுள்ள இந்து சமுத்திர பிராந்திய ஒத்துழைப்பு ஒன்றிய மாநாட்டில் ஜனாதிபதி பங்குபற்றவுள்ளார். அந்த மாநாடு நிறைவடைந்த பின்னர் இந்தோனேசியாவில் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபடு மாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. Read more








