fdfdசுதந்திர வர்த்தக வலயம் மற்றும் பொது சேவை தொழிலாளர் சங்க மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு, தெற்கு மகளிர் இணைந்து மன்னாரில் இன்று பாத யாத்திரை நடத்தியுள்ளனர்.

பாத யாத்திரையில் கலந்து கொள்ளுவதற்காக தென்பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான மகளிர் வந்திருந்தனர். மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மகளிரும் இதில் கலந்து கொண்டிருந்தனர். இன்று முற்பகல் 10 மணியளவில் மன்னார் பிரதான பாலத்தில் ஆரம்பமான பாத யாத்திரை பிரதான வீதியூடாக சென்று மன்னார் நகர சபை மண்டபத்தை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.