Header image alt text

DSC06321கேப்பாப்புலவு பூர்வீக கிராமத்தில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள தமது சொந்த நிலத்தை மீட்கும் போராட்டத்தை இன்று ஆறாவது நாளாகவும் பொதுமக்கள் முன்னெடுத்துள்ளனர். 128 குடும்பங்களுக்கு சொந்தமான 484 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியே பொதுமக்கள், தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தை தொடர்ந்து, பொதுமக்கள் சொந்த நிலங்களில் இருந்து வெளியேறிய நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் பல பிரதேசங்கள் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டன. கடந்த முதலாம் திகதி, புலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் நிறைவுக்கு வந்ததை அடுத்து கேப்பாப்புலவு மக்கள் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். Read more

post sendவவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் இன்று 11ஆம் நாளாக இடம்பெற்று வருவதுடன் ஜனாதிபதிக்கு தபால் அனுப்பும் போராட்டம் அதனுடன் இணைந்ததாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் இன்று காலை இலுப்பையடி பகுதியில் ஜனாதிபதிக்கு தபால் அனுப்பும் போராட்டம் இரண்டாம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய இரண்டாம்கட்ட தபால் அனுப்பும் போராட்டத்தில் பெருமளவிலான மக்கள் இணைந்து கொண்டு தங்களது தபால்களை ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பதற்காகச் சென்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Geneva UNஐ.நா மனித உரிமைப் பேரவையில் உத்தேச தீர்மானம் தொடர்பில் பேச்சுவார்த்தை ஒன்று நாளைய தினம் நடாத்தப்பட உள்ளதாக மனித உரிமை அமைப்புக்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34ஆம் அமர்வுகளில், இலங்கை தொடர்பிலான தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்தின் உள்ளடக்கம் தொடர்பிலேயே நாளை கலந்துரையாடப்பட உள்ளது.

இந்நிலையில், தீர்மானம் தொடர்பிலான உத்தேச வரைவுத் திட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இதில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து நாளைய தினம் பேசப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. Read more

sfdfdவவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வெடிவைத்தகல் கிராமம் 100 சதவீதம் தமிழ் மக்களுக்குரிய கிராமமாகும். இந்தக் கிராமத்தில், சிங்கள வாக்காளர் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என வவுனியா பிரஜைகள் குழுவின் ஸ்தாபகத் தலைவர் கி.தேவராசா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், “வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட 221ஏ வெடிவைத்தகல், 221பி மருதோடை, 221 சி பட்டிக்குடியிருப்பு என்ற எல்லையோர கிராம சேவகர் பிரிவுகளில் வாழ்ந்த தமிழ் மக்கள் யுத்தக்காலத்தில் இடம்பெயர்ந்திருந்த நிலையில், தற்போது மீளக்குடியேறியுள்ளனர்.
Read more

viyalendran MPஇலங்கைக்கு சர்வதேச சமூகம் மேலும் கால அவகாசத்தினை வழங்க கூடாது என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேசத்திடம் இலங்கை வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயத்திற்கும் ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்திற்கும் இடையிலான கரம் பெரும் சமர் போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,
Read more