Header image alt text

accordஇலங்கை மற்றும் இந்தோனேஷியாவுக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு இரு நாட்டு தலைவர்களும் இணங்கியுள்ளனர்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெறும் இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று அந்நாட்டு ஜனாதிபதியை சந்தித்துள்ளார். இதன்போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

sdsகிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இரணைத்தீவு மக்கள் இன்று கவனயீர்ப்பு பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். தங்களின் பூர்வீக நிலமான இரணைத்தீவில் மீள்குடியமர்த்துமாறு தெரிவித்து இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இரணைத்தீவு எமது பூர்வீக நிலம். எமது நிலத்தில் குடியிருக்க அனுமதி வழங்குமாறு தெரிவித்து பூநகரி மகா வித்தியாலயத்திற்கு அருகிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணி பூநகரி பிரதேச செயலகத்தை சென்றடைந்தது, அங்கு ஜனாதிபதி, வடக்கு முதலமைச்சர், மாவட்ட அரச அதிபர் ஆகியோருக்கான மகஜரும் பிரதேச செயலர் கிருஸ்ணாந்தராஜாவிடம் கையளிக்கப்பட்டது. Read more

bfgfயாழ் மாவட்ட பட்டதாரிகள் தமக்கு வேலைவாய்ப்பை வழங்குமாறு, வலியுறுத்தி கடந்த மாதம் 27ஆம் திகதி முதல் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் எழுத்துமூலம் பதில் வழங்கும் பட்சத்தில் மாத்திரமே தமது போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 10 நாட்களாக தமது போராட்டத்திற்கு தீர்வொன்று வழங்கப்படாத நிலையில் நேற்று மனித சங்கிலிப் போராட்டத்தை மேற்கொண்டனர். Read more

chandrika (11)பங்களாதேஷ், ரூபவ் சிட்டகொங் நகரில் அமைந்துள்ள பெண்களுக்கான ஆசிய பல்கலைக்கழகத்தின் சர்வதேசக் காப்பாளர் சம்மேளனத்தில் இணைந்து கொள்வதற்கான அழைப்பை, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஏற்றுள்ளார்.

கிழக்கு-மேற்கு ஸ்தாபகப் பங்காண்மையின் வெளிப்பாடாக அமைந்துள்ள இப் பல்கலைக்கழகமான ரூபவ், மத்திய கிழக்கு மற்றும் ஆசிய பிராந்தியத்தைச் சேர்ந்த பெண்களுக்கு சேவை அடிப்படையிலான தலைமைத்துவப் பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதில் 15 நாடுகளைச் சேர்ந்த அதிதிறமை வாய்ந்த பெண்கள் தமது சேவைகளை வழங்கி வருகின்றனர். Read more

sமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க இணைப்பாளருக்கும் இன்று நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் அமைதிக்கும், சமாதானத்திற்கும், அரச கரும நடவடிக்கைகளுக்கும் குந்தகம் அல்லது இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளப்போவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பொலிஸாரினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து அவர்களுக்கு இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தலைவர் ரி.கிஷாந்த் மற்றும் குறித்த சங்கத்தின் அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் தென்னே ஞானானந்த தேரர் உட்பட நான்கு பேருக்கு இந்த அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. Read more

sivasakthi ananthanஜெனீவாவில் இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத் தொடரின்போது இலங்கைக்கு இன்னும் கால அவகாசம் வழங்குவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அறியமுடிகின்றது. தமது நலன்களுக்காக தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை சிதறடித்து தமிழ் மக்களுக்கு துரோகத்தை இழைக்கும் செயற்பாட்டில் மேற்குலக நாடுகள் ஒருபோதும் ஈடுபடக்கூடாது என இந்த உயரிய சபை ஊடாக கேட்டுக்கொள்கின்றேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

“என்னிடம் நேரடியாகத் தெரிவியுங்கள்’ என்ற அலுவலகத்தை ஜனாதிபதி வடக்கில் திறந்து வைத்திருப்பதானது நொந்துபோயுள்ள மக்களை மேலும் ஏமாற்றும் நடவடிக்கையாகும். மாகாண சபையின் நிர்வாகம் அவசியமில்லை. அனைத்தையும் எம்மிடம் நேரடியாகத் தெரிவியுங்கள் எனக் கூறும் வகையிலேயே இந்த அலுவலகம் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். Read more

karu jayasuriya (5)தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை சுயாதீன உறுப்பினர்களாக ஏற்க முடியாது என, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

ஏதேனும் கட்சியை அல்லது குழுவின் ஊடாக தேர்தலின் மூலம் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு வந்திருப்பின், குறித்த கட்சி அல்லது குழுவையே பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் எனவும் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை இந்த விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு இன்று பிற்பகல் மீண்டும் கூடியபோது, தேசிய சுதந்திர முன்னணியை தனியான கட்சியாக அறிவிக்க வேண்டும் என முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் மீண்டும் அமளிதுமளி ஏற்பட்டது. Read more

dddதமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதன் எதிரொலியாக சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம், தூதரக அதிகாரி வீடு மற்றும் இலங்கை சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு துப்பாக்கி ஏந்திய பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்திய – இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேசுவரம் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டதில், தங்கச்சி மடத்தைச் சேர்ந்த இளைஞர் பிரிஜ்ஜோ (21) உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read more

dfgdஇந்திய மீனவர் ஒருவர், இலங்கை கடற்படையினரால் சுட்டு கொல்லப்பட்டதாக கூறப்படும் விடயம் தொடர்பாக, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்திய துணை ஜனாதிபதி ஹமீது ஹன்சாரிக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் இடம்பெற்ற, 20ஆவது இந்தியப் பெருங்கடல் கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டில் பங்குபற்றிய நிலையிலேயே, குறித்த இருநாட்டு தலைவர்களும் இலங்கை கடற்படை, இந்திய மீனவர்களை சுட்ட விவகாரம் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. Read more