வடக்கு மாகாண ஆளுநருடன் எதிர்வரும் 13ஆம் திகதி வடக்கு மாகாண சபை உறுப்பினர்களும், வேலையில்லாப் பட்டதாரிகளுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபைக்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வேலையிலாப் பட்டதாரிகளுக்கும் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் பேரவை செயலகத்தில் நடைபெற்றது. இதில் மாகாண சபையும் ஆளுநரும் இணைந்து செயற்பட்டால் தான் இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வினை பெறமுடியும் என மாகாண சபை உறுப்பினர்கள் போராட்டக்கார்களுக்கு தெளிவுபடுத்திய நிலையில், அதனை ஏற்றுக்கொண்ட போராட்டக்காரர்கள் ஆளுநரை சந்திப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். எனினும் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெறும் எனவும் பட்டதாரிகள் அறிவித்துள்ளனர்.