மக்களுக்கு தேர்தல் தொடர்பிலும் பாராளுமன்றம் தொடர்பிலும் நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான புதிய வாக்காளர்களின் பதிவுகள் கடந்தகாலத்தை விடவும் 50 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி தேர்தலை நடத்தாது காலம் கடத்துவது ஜனநாயகத்தின் மீதான அத்துமீறல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.