கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த கிராமத்தையும் தமது சொத்துக்களான காணிகள் மற்றும் குடியிருந்த வீடுகள் என்பனவற்றையும் கையகப்படுத்தி அதில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி கடந்த 11 நாட்களாக கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவ தலைமையக வாயில் முன்பாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பதினொரு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுக்கு தமது சொந்த நில விடுவிப்பு தொடர்பில் சாதகமான பதில்கள் எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில் இன்று முதல் குறித்த கிராமத்தை சேர்ந்தச் இளைஞர் மற்றும் முதியவர் இணைந்து 2பேர் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை படைத்தலைமையக வாயில் முன்பாக முன்னெடுத்துள்ளனர். தமது சொந்த நிலங்களில் ஆக்கிரமித்துள்ள படையினர் அதிலுள்ள வளங்கள் அனைத்தையும் தாம் அனுபவித்துக்கொண்டு வாழ்வதாகவும் தம்மை தமது சொந்தநிலங்களில் குடியமரவிடாது தமது கிராமத்துக்கு ஊடாக செல்லும் பிரதான வீதியை கூட மறித்து பாரிய கதவு ஒன்றினை அமைத்துள்ளனர். Read more