இலங்கையில் போருக்குப் பிறகு நல்லிணக்கம் மற்றும் போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு மேலும் இரண்டு ஆண்டு காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா மன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் நிபந்தனைகளை நிறைவேற்ற 2015-ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் வழங்கிய ஒன்றரை ஆண்டு அவகாச காலத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற விமர்சனத்தை இலங்கை தமிழர் அமைப்புக்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்கள் முன்வைத்தனர். Read more