Header image alt text

viyalendran (2)நல்லாட்சியிலும் தீய விடயங்கள் தொடர்வது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த நாட்டைப் போதைப் பொருள் பாவனையற்ற நாடாக மாற்றுவதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார். அவரின் போதையொழிப்பு அறிவிப்பு எல்லோராலும் வரவேற்கப்பட்டது. ஆனால், மட்டக்களப்பு வாழைச்சேனையிலே மாபெரும் மதுபான உற்பத்திச்சாலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Read more

ssfகிளிநொச்சி பன்னங்கண்டி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்கள் தமது குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும் அடிப்படை வசதிகள் நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன இதுவரை கிடைக்கவில்லை எனக் கோரி ஆரம்பித்த போராட்டம் இன்று 3 ஆவது நாளாக தொடருகிறது.

இவ்வளவு காலமும் அடிப்படை உரிமை இல்லாத மக்களாக வாழ்ந்து விட்டோம் இனியும் வாழ முடியாது தயவு செய்து எமக்கான காணி உரிமத்தினை வழங்குங்கள் என குறித்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் தமக்கான காணி உரிமம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என போராடும் மக்கள் கூறியுள்ளனர்.

mannarமன்னார் பாப்பமோட்டைப் பகுதியிலிருந்து மோட்டார் குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. வன்னி விமானப்படை முகாமின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, மோட்டார் குண்டுகள், மிதி வெடிகள் மற்றும் புலிகளால் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகள் உள்ளிட்ட வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், இவை நீதிமன்ற உத்தரவின் பெயரில், செயழிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

keppapilavuஇராணுவத்தினர் வசமிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட கேப்பாபிலவு காணிகளில் இருந்து பெருமளவான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்கள் தொடர் போராட்டத்தின் மூலம் அண்மையில் தமது பூர்வீக நிலங்களை மீட்டிருந்தனர்.

இந்நிலையிலேயே விடுவிக்கப்பட்ட சில காணிகளில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் அச்சத்தினைத் தற்போது தோற்றுவித்திருப்பதாக கூறப்படுகின்றது. குறித்த மக்கள் அண்மையில் தமது காணிகளைச் சுத்தம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும்போது பயங்கர சத்தத்துடன் வெடிபொருள் ஒன்று வெடித்ததாகவும், இதனால் எதுவித உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. Read more

chandrikaமுன்­னாள் ஜனாதிபதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்கா குமா­­ர­ண­துங்க, நாளை யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜயம் செய்யவிருப்பதாக தெரி­விக்­கப்­பட்­டுள்ளது.

தேசிய ஒரு­மைப்­பாட்­டுக்­கும் நல்­லி­ணக்­கத்­துக்­கு­மான அலு­வ­ல­கத்­தால் வட­ம­ராட்­சிப் பகு­தி­யில் முன்­னெ­டுக்கப்­ப­டும் நட­வ­டிக்­கை­களை தொடக்கி வைப்­ப­தற்­கும், பார்­வை­யி­டு­வ­தற்­குமே அவர் யாழ்ப்­பா­ணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். Read more

lanka malaysiaபாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன மற்றும் மலேஷிய பாதுகாப்பு அமைச்சர் டாடோ சேரி நிஷாமுதின் ஆகியோருக்கு இடையில் விஷேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தத் தேவையான விடயங்கள் குறித்து இதன்போது, கலந்துரையாடப்பட்டதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு குறிப்பிட்டுள்ளது. Read more

sri lankan returnsஇந்தியாவிலிருந்து இலங்கை அகதிகள் 36 பேர் நேற்று நாடு திரும்பியுள்ளனர். மேற்படி 36 பேரையும், யு.என்.எச்.சி.ஆர் அமைப்பு, இரண்டு விமானங்களின் மூலம், சர்வதேச கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு, நேற்று பிற்கல் அழைத்து வந்துள்ளது.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, மன்னார், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள், மும்பை மற்றும் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்திருந்ததாக அவ்வமைப்பு மேலும் கூறியுள்ளது. Read more

wickramasingheமலேஷியாவில் நடைபெறவுள்ள ரோயல் பொலிஸ் தினத்தில் கலந்துகொள்வதற்காக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, சென்றுள்ளதால், பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சீ.டீ.விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மலேஷியா, கோலாலம்பூரில் நடைபெறவுள்ள 210ஆவது ரோயல் பொலிஸ் தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பொலிஸ்மா அதிபர், இன்று அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். நான்கு வாரங்கள் பதில் பதில் பொலிஸ்மா அதிபராக சீ.டீ.விக்ரமசிங்க கடமையாற்றவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துயர்பகிர்வு

Posted by plotenewseditor on 24 March 2017
Posted in செய்திகள் 

image-0

 

 

 

 

 

 

 

 

 

தோழர் குலேந்திரன் அவர்களின் சகோதரர்

தொடர்புகட்கு: 0094777498461

police-stationபொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்பில் பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜே.ஏ.எஸ்.என்.கே.ஜயசிங்க, களுத்துறை இலங்கை பொலிஸ் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கரடியனாறு பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எச்.ஆர்.பீ.சேனாநாயக்க, பொலிஸ் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். பொலிஸ் பரிசோதகர் ஆர்.சி.ஹெட்டியாராச்சி, நுகேகொடையிலிருந்து முல்லேரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இடமாற்றப்பட்டுள்ளார். Read more