இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடத் தீர்மானித்துள்ளதாக, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இன்று பிற்பகல் கூடிய தமது சங்கத்தின் நிறைவேற்று குழு, வேலை நிறுத்தத்தைக் கைவிட முடிவுசெய்துள்ளதாக அச் சங்கத்தின் தலைவர் இந்திக்க ருவன் பதிரண தெரிவித்துள்ளார். இன்று காலை அதிகாரிகள் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.