இலங்கையில் திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று புதன்கிழமை தொடங்கி அனைத்து பள்ளிகளும் மூன்று நாட்கள் மூடப்பட்டுள்ளன.
பள்ளிக் கூட ஆசிரியர்களும் மாணவர்களும் இந் நோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் வரவிலும் வீழ்ச்சி காணப்பட்டுள்ளதையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. Read more