Header image alt text

fgfgவவுனியாவில் போராட்டத்தினை மேற்கொண்டுவரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று 10ஆவது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், அவசரகாலச் சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தியும் வவுனியாவில் இவர்கள் தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

sfdகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று பரந்தன் மக்களும் இணைந்து கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி, அவர்களது உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும், கவனயீர்ப்பு போராட்டம், இன்று 14ஆவது நாளாக தொடர்கின்றது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

gerகடந்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமக்கு நியாயம் கிடைக்கும் வரை, திருகோணமலையில் சுழற்சி முறையிலான உணவுதவிர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

இன்று காலை 09.00 மணிமுதல், கிழக்கு மாகாண ஆளுனரின் அலுவலகத்தின் முன்னால், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

websitesஎதிர்வரும் 7ஆம் திகதி முதல் காவற்துறை நற்சான்றிதழ் அறிக்கையினை காவற்துறை இணையத்தளத்தின் ஊடாக பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முறைமைக்கு அமைய இணையத்தளத்துடன் இணைந்துள்ள நிலையில் துரிதகதியில் அறிக்கையினை பெற முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் பரிவர்தனை தொழில்நுட்ப முகவர் மற்றும் காவற்துறை தகவல் தொழில்நுட்ப பிரிவு என்பன இணைந்து இந்த இணைய தளத்தினை ஸ்தாபித்துள்ளது. பொது மக்கள் றறற.pழடiஉந.டம என்ற இணைய தளத்தின் ஊடாக தமது கணனி அல்லது கையடக்க தொலைபேசியின் ஊடாக காவல்துறை அறிக்கை விண்ணப்பத்தினை சமர்ப்பித்து பெற முடியும் என காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த புதிய இணையத்தளம், நாளை மறுதினம் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

werewrewதமது நிலங்கள் விடுவிக்கப்படும் வரை போராட்டம் தொடருமென்று கேப்பாப்புலவையும் சூரியபுரத்தையும் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவின் கேப்பாப்புலவையும் சூரியபுரத்தையும் சேர்ந்த மக்கள், தமது நிலங்களை விடுவிக்க வலியுறுத்தி, முல்லைத்தீவு படை முகாமுக்கு முன்பாக முன்னெடுத்து வரும் போராட்டம், 5ஆவது நாளாகவும் இன்று தொடர்ந்தது.

கேப்பாப்புலவைச் சேர்ந்த 145 குடும்பங்களும் சூரியபுரத்தைச் சேர்ந்த 46 குடும்பங்களுமே, மக்களுக்குச் சொந்தமான 450 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, கடந்த 01ஆம் திகதி போராட்டத்தை ஆரம்பித்தனர். முல்லைத்தீவு இராணுவ முகாம், கேப்பாப்புலவு, சூரியபுரம் ஆகிய 528 ஏக்கர் காணிகளை உடைய கிராமங்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

dgfdgfஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ் விஜயத்தின்போது, செய்தி சேகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களது பணிகளுக்குப் பொலிஸார் இடையூறு ஏற்படுத்தியமைக்கு யாழ். ஊடக அமையம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

ஊடக அமையத்தின் தலைவர் மற்றும் செயலாளரினால் விடுக்கப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஊடக சுதந்திரம் பற்றியும் தகவலறியும் உரிமை பற்றியும் பேசிக்கொண்டு இந்த அரசாங்கமும், ஊடகவியலாளர்களது குரல்வளைகளை நெருக்கிப் பிடிப்பதை என்றுமே ஏற்றுக்கொள்ள முடியாது. Read more

chritena lagardசர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டீன் லகாட் இந்த மாதத்தில் இலங்கை வரமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத சில காரணங்களினால் திட்டமிட்டது போல் அவர் இலங்கை வர முடியாது உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் கெரி ரைஸ் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், விரைவில் அவர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வார் என அவரினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்ட கடன் சில நிபந்தனைகளுடன் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்ற வகையில், நட்டத்தில் செயல்படும் அரச நிறுவனங்கள் தமது நடவடிக்கைகளை சிறந்த முறையில் லாபம் ஈட்டக்கூடியதாக மாற்ற நடவடிக்கை எடுப்பதற்கு கடுமையான சட்டங்களுக்கான அனுமதி அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more

aதிருகோணமலை, பாலம்பட்டாறு பகுதியில் நேற்றுமாலை 6.30அளவில் உழவு இயந்திரத்தில் ஏற்றிச்செல்லப்பட்ட நெல் அறுவடை இயந்திரத்தின் இரும்புபாகம் டிமோபட்டா லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 18பேர் காயமடைந்துள்ளனர்.

இதில் காயமடைந்தவர்கள், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கந்தளாய், ரஜஎல பகுதியில் ஒரு வருடத்துக்கு முன்னர் மரணமடைந்த நபரொருவரின் 01வருட பூர்த்தியை முன்னிட்டு, 05ம் கட்டை பகுதியிலுள்ள அநாதை சிறுவர் இல்லத்துக்கு, தானமாக இரவு சாப்பாடு வழங்குவதற்காகவே அந்த டிமோ பட்டா லொறியில் இவர்கள் பயணித்துள்ளனர். Read more