ரயில் ஓட்டுநர்கள் இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்க திட்டமிட்டிருந்த வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளனர்.
இன்றுகாலை போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக, ரயில் ஓட்டுநர்கள் சங்க செயலாளர் இந்திக்க தொடம்கொட கூறியுள்ளார். இக் கலந்துரையாடலின் போது, ரயில் ஓட்டுநர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்க நாளை அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக்கொள்ளவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் வாக்குறுதியளித்துள்ளார். Read more