கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆரம்பித்துள்ள எதிர்ப்பு போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
20-02-2017 அன்றுகாலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் முன்றலில் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் பதினோராவது நாளாகவும் தொடர்ந்து நடைபெறுகின்றது. காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயத்தில் இனியும் காலம் தாமதிக்க வேண்டாம் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.