Header image alt text

q2வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கபட்ட மாற்றுத்திறனாளியின் பிள்ளைக்கு மடிக்கணணி ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இன்று லண்டன் நாட்டை சேர்ந்த MS.DHUSIRA WIGNARAJAH என்பவர் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தன் ஊடாக களனி பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்ப கல்வி பயிலும் மாணவி அ.டக்சியானி என்பவருக்கு அவரது கல்வி நடவடிக்கை ஊக்குவிக்கும் முகமாக 53000 ரூபா பெறுமதியான புதிய மடிக்கணனி ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

மேற்படி விண்ணப்பம் பெருங்குளம் சந்தி சாவகச்சேரியை முகவரியாக கொண்ட அகத்தியர் ஆனந்தராஜா என்ற முள்ளந்தண்டு வடம் பாதிக்கபட்டுள்ள பயனாளி தனது பிள்ளை களனி பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப தொடர்பாடல் கற்கை நெறியை கல்வி பயின்று வருகின்றார் Read more

ssவட மாகாண புதிய கடற்படை கட்டளை தளபதி ரியல் எட்மிரல் கே.கே.ஜே.டி சில்வா வட மாகாண ஆளுநர் ரெஜினோல் குரேவை சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளார்.

வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பானது, நட்பு ரீதியான சந்திப்பாக அமைந்திருந்தது என வட மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடல் மார்க்கமாக யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்படுகின்ற சட்டவிரோத போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் குறித்து இதன்போது மிக விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

sadfsdsவேலை வாய்ப்புக்களை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கோரி யாழ் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த கவனயீர்ப்பு போராட்டம் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று முற்பகல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வேலை வாய்ப்புக்களை பெற்றுத் தருமாறு கோரி வட மாகாணத்தில் கடந்த 32 நாட்களாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. போராட்டக்காரர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை எந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

jaffna courtsயாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நபருக்கு யாழ் மேல் நீதிமன்றம் இன்று மூன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இந்த தீர்ப்பை இன்று வழங்கியுள்ளார். யாழ்ப்பாணம் – அச்சுவேலி – கதிரிப்பாய் பகுதியில் 2014ஆம் ஆண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெட்டி கொலை செய்யப்பட்டிருந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. Read more

vavuniyaவட மாகாணத்திலுள்ள வேலையில்லா பட்டதாரிகள் வவுனியா பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வட மாகாணத்தில் மாத்திரம் சுமார் 3500 பட்டதாரிகள் வேலையில்லா பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், வெளி மாகாணங்களிலுள்ள பட்டதாரிகள் வட மாகாணத்திற்குள் உள்வாங்கப்பட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதனால், வட மாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கு விரைவில் வேலைவாய்ப்புக்களை பெற்றுத் தருமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Read more

geeth noyarஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் சபை உறுப்பினர் உட்பட ஐந்து இராணுவ வீரர்களுக்கு இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது. ஒலுவருக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைப்படி ஆறு பேரையும் விடுவிக்கும்படி கல்கிஸ்ஸ மேலதிக நீதவான் லோசனா அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார். Read more

fffயாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தின் அடக்குமுறைக்கு எதிராக கலைப்பீட மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். யாழ் பல்கலைக்கழகத்திற்கு வெளியில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக மாணவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தென்னிலங்கை அரசாங்கத்தின் நற்பெயரை பாதுகாத்து கொள்வதற்காக பல்கலைக்கழக நிர்வாகம் பல்வேறு வழிகளில் மாணவர்களின் உரிமைகளை அடக்கி வருவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். Read more

sddsவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, தனது உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு, மாகாநாயக்க தேரர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே, அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர கூறியுள்ளார்.