Header image alt text

jaffna universityயாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட வரவேற்பு நிகழ்விற்கு முதல்நாள் இரவு இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் கலைப்பீடத்தின் 13 மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்க நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தில் கடந்த 18ம் திகதி இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளின்போது சில மாணவர்களினால் பல்கலைக்கழக கட்டிடத்தின் கண்ணாடிகள் பல அடித்து நொறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினால் வரவேற்பு நிகழ்விற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. Read more

kilinochchi help (9)விடுதலைப் போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை, நாகேந்திரபுரத்தைச் சேர்ந்த ரத்தினம் சின்னப்பிள்ளை அவர்களுக்கு 14,000/- ரூபா நிதியொதுக்கீட்டில் கட்டில், மெத்தை உள்ளிட்ட மிகவும் அத்தியாவசியமான பொருட்களை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் ஜேர்மன் கிளையினர் கடந்த 22.03.2017 புதன்கிழமையன்று வழங்கியுள்ளனர்.

மறைந்த கழக உறுப்பினர் பெறோஸ் (ரத்தினம் செல்வம்) அவர்களின் தாயாரான ரத்தினம் சின்னப்பிள்ளை அவர்கள் மிகவும் வயோதிபமடைந்துள்ள நிலையில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் ஜேர்மன் கிளையினரால் இந்த அத்தியாவசிய உதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

மேற்படி உதவி வழங்கும் நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினர் (கிளிநொச்சி மாவட்டம்) திரு.க.மகேந்திரன் (ராஜா) றொனி மாஸ்டர், செல்வம் மற்றும் சிவராசா ஆகியோர் பங்குகொண்டிருந்தனர். Read more

sயாழ் இந்துக் கல்லூரி மாணவன் ஏ.அபிநந்தன் க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் ஐந்தாம் இடத்தையும் தமிழ் மொழி மூலத்தில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

2016ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று அதிகாலை இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதன்போது 2016ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் விபரம் வெளியாகியுள்ளன. இதனடிப்படையில் அகில இலங்கை ரீதியில் ஐந்தாம் இடத்தையும் தமிழ் மொழி மூலம் முதலாம் இடத்தையும் யாழ் இந்துக் கல்லூரி மாணவன் பெற்றுள்ளார். Read more

hfgfகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பில், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண கல்விஅமைச்சர் த.குருகுலராஜா, வடமாகாண உறுப்பினர்களான அனந்தி சசிதரன், து.ரவிகரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் உரிய தீர்வு வழங்கப்படவேண்டும் என தெரிவித்து, கிளிநொச்சி, கந்தசாமி கோவில் முன்பாக காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் 37ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அதேவேளை, மருதங்கேணியில் 13 ஆவது நாளாக எவ்வித தீர்வுகளும் இன்றி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Captureஇலங்கைப் பொலிஸாரின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தின்மீது, சட்டவிரோத ஊடுறுவல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இணையத்துக்குள் ஊடுறுவியவர்கள், பொலிஸாரின் இணையப் பக்கத்திலிருந்த எந்தவொரு தகவலையோ, பதிவுகளையோ அல்லது தரவுகளையோ அழிக்கவில்லை என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. குறித்த இணையத்தை ஊடுறுவியவர்கள், இணையத்தின் முகப்பு பகுதியில் மாத்திரமே மாற்றத்தை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

vigneswaranவடக்கில் மக்கள் தங்களுடைய உரிமையைக் கேட்டுப் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றபோதும் அந்தப் போராட்டங்கள் தொடர்பில், அரசாங்கம் போதிய கரிசனை காட்டவில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், சுவிஸ்நாட்டுத் தூதுவரிடம் எடுத்துக் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு விஐயம் செய்திருந்த இலங்கைக்கான சுவிஸ்நாட்டுத் தூதுக் குழவினர், வடக்கு மாகாண முதலமைச்சரை, அவரது அலுவலகத்தில் நேற்றுமாலை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலே, முதலமைச்சர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.
Read more

jjjதிருகோணமலையிலுள்ள கிண்ணியா தள வைத்தியசாலையை தரம் உயர்த்தித் தருமாறு கோரி இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த கவனயீர்ப்புப் போராட்டம் மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியின் பழைய வைத்தியசாலைக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் கிண்ணியா இளைஞர்கள்,சட்டத்தரணிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். தமது கோரிக்கைகான தீர்வு பெற்று தரும்வரை தங்களின் போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

njjjjjமுல்லைத்தீவு பரந்தன் பிரதான வீதியில் வட்டுவாகல் பாலத்துக்கு அண்மையாக அமைந்துள்ள கடற்படையின் கோத்தபாய கடற்படை தளம்அமைந்துள்ள பிரதேசம் மக்களுக்கு பாவனையற்ற பிரதேசமாக எச்சரிக்கை பெயர் பலகைகள் கடந்த சனிக்கிழமை முதல் நிறுவபட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

வட்டுவாகல் பாலம் தொடக்கம் முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமம் வரை உள்ள தமக்கு சொந்தமான 671 ஏக்கர் நிலப்பரப்பை அபகரித்து பாரிய கடற்படை தளத்தை கடற்படையினர் நிறுவியுள்ளதாகவும் தாம் தமது சொந்த நிலங்களை இழந்து அகதி வாழ்க்கை வாழ்வதாகவும் குறித்த கடற்படைமுகாம் அமைந்துள்ள காணிகளுக்கு சொந்தமான மக்கள் தொடர்சியாக குற்றஞ்சாட்டி வந்துள்ளனர்.
Read more

dddகிளிநொச்சி – பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று ஏழாவது நாளாகவும் தொடர்கிறது.

காணி அனுமதி பத்திரம் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோரி பன்னங்கண்டி கிராம மக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கெண்டு வருகின்றனர். நாம் 1990ஆம் ஆண்டு முதல் மேற்படி கிராமத்தில் வாழ்ந்து வருகின்றோம். Read more