Header image alt text

europeanஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. மனித உரிமைகள் பேரவையில் நேற்று உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதியே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையையும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி வரவேற்றுள்ளார். இலங்கையில்,மனித உரிமைகள், நல்லிணக்கம், பொறுப்புக்கூறலை ஊக்குவிக்க, குறித்த தீர்மானம் முழுமையாகவும், உரிய காலத்துடனும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் ஐரோப்பிய ஒன்றியம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

britishஇலங்கையில் நிலவும் டெங்கு நோய்ப் பரவல் ஆபத்து தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் அந்த நாட்டின் பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் டெங்கு பரவல் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் ஜனவரி மார்ச் மாதங்களுக்கு இடையிலேயே 19 ஆயிரத்து 419 பேர், டெங்கு நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனவே இலங்கைக்கு பயணிக்கும் பிரித்தானியர்கள் அவதானமாக செயற்படுமாறு அந்த நாட்டின் குடிவரவுத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

arjun mahendran (2)முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் திரைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பாக பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி புலனாய்வு ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு ஆஜராகியுள்ளார். மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அவருக்கு ஆணைக்குழுவின் செயலாளரினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்றுகாலை 10 மணியளவில் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

accident (3)திருகோணமலை கந்தளாய் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். திருகோணமலை நோக்கிப் பயணித்த கெப் வண்டியொன்று காரொன்றுடன் மோதி இன்று அதிகாலை 3.45 அளவில் விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்தின்போது கெப் வண்டியில் பயணித்த 5 பேர் பலத்த காயமடைந்த நிலையில், கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். Read more

Geneva UNஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் கொண்டுவரப்­பட்ட தீர்­மா­னத்தை நிறை­வேற்ற மாட்­டேன் என்று ஓர் அரசு தெளி­வா­கச் சொல்­லு­மி­டத்து, அவர்­க­ளுக்கு அதே தீர்­மா­னத்தை நிறை­வேற்ற கால அவ­கா­சம் வழங் ­குவது ஐ.நா. உரி­மை­கள் சபை­யின் நம்­ப­கத்­தன்­மையைக் கேள்­விக்­குட்­ப­டுத்­தும்.

இவ்­வாறு தமிழ் சிவில் சமூக அமைப்­புக்­கள், தொழிற்சங்­கங்­கள், அர­சி­யல் கட்­சி­கள், ஐ.நா. மனித உரி­மை­கள் சபைக்கு கூட்டு விண்­ணப்­பம் செய்­துள்­ளன. இலங்கை அர­சுக்கு கால அவகாசம் வழங்­கு­தல் நீதிக்­கான தேடலை நீர்த்­துப் போகச் செய்­யும். வடக்கு – கிழக்­கில் வாழு­கின்ற தமிழ் மக் கள் சுயா­தீ­ன­மான பன்­னாட்டு விசா­ர­ணையை வலு­யு­றுத்தி வந்­துள்­ள­னர், தொடர்ந்து வலி­யு­றுத்­து­கின்றனர். Read more