Header image alt text

mangala (4)நல்லிணக்கத்திலும் பொறுப்புக்கூறலிலும்  முன்னேற்றத்தை வெளிக்காட்டுவதற்கு நாங்கள் இரண்டு வருடகால அவகாசத்தை ஐ.நா.விடம் கோரினோம். அந்த கால அவகாசம் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. நாங்கள் எமது  திட்டத்திற்கேற்ப உள்ளக விசாரணையை சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பின்றி  முன்னெடுக்கவே எதிர்பார்க்கின்றோம் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

சர்வதே நீதிபதிகள் என்பது  இலங்கை தொடர்பான பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ள ஒரு பரிந்துரை மட்டுமேயாகும். அதனை கட்டாயமாக  ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம்  எமக்கில்லை. Read more

frenceநேற்று பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள உலக நாணய நிதியத்தின் தலைமையகத்தில், காகித உறையினுடாக அனுப்பப்பட்ட வெடிகுண்டு வெடித்ததனால் தலைமையகம் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குறித்த காகித உறையை பிரித்த உலக நாணய நிதியத்தின் பணியாளர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கும், கடந்தவாரம் ஜேர்மனியின் நிதி அமைச்சருக்கு வெடிகுண்டுடன் அனுப்பப்பட்ட காகித உறைக்கும் எதாவது தொடர்புள்ளதா என பிரான்ஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Ivana_Trumpடொனால்ட் ட்ரம்ப் பற்றிய புத்தகம் ஒன்றை வெளியிட, அவரது முன்னாள் மனைவி இவானா ட்ரம்ப் ஏற்பாடு செய்துவருகிறார்.  ‘ரெய்சிங் ட்ரம்ப்’ என்று பெயரிட்டுள்ள இந்தப் புத்தகத்தில், ‘ட்ரம்ப்பின் வியாபாரம் பற்றியோ, அரசியல் பற்றியோ நான் எதையும் எழுதவில்லை. முழுக்க முழுக்க அவருடனான எனது தனிப்பட்ட வாழ்க்கையையும், எனது மூன்று பிள்ளைகளான இவங்க்கா, எரிக் மற்றும் டொனால்ட் ஜூனியர் ஆகியோரை வளர்த்த விதம் பற்றியுமே எழுதியிருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார் இவானா. Read more