Header image alt text

sssபிரிட்டனின் ஓர் அங்கமாக உள்ள ஸ்காட்லாந்து, தனி நாடாகப் பிரிந்து செல்ல விரும்பியது. இது தொடர்பாக 2014-ம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், ஸ்கொட்லாந்து, பிரிட்டனிலிருந்து பிரிய எதிர்ப்பு தெரிவித்து 55 சதவீத மக்கள் வாக்களித்ததால் அந்த முயற்சி தோல்வியடைந்தது.

இந்நிலையில், பிரிட்டனில் இருந்து பிரிந்து சுதந்திர நாடாக செயல்படும் வகையில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்த ஸ்கொட்லாந்து முடிவு செய்துள்ளது. இதற்காக பாராளுமன்றத்தில் அனுமதி கேட்கப்படும் என முதல் மந்திரி நிகோலா ஸ்டர்ஜியான் கூறியுள்ளார். பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தால், இந்த ஆண்டின் பிற்பாதியிலும் அடுத்த ஆண்டு முதல் பாதியிலும் வாக்கெடுப்பை நடத்துவதற்கு விரும்புகிறார் நிகோலா. Read more

genevaஇலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக் கூறலையும், மனித உரிமைகளையும் முன்னேற்றுவதற்கான, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய வரைவுத் தீர்மானத்தின்படி, எதிர்வரும் 2019ஆம் ஆண்டுவரை, இலங்கைக்குக் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, மொன்டனீக்ரோ, மசிடோனிய குடியரசு, பெரிய பிரித்தானியா, வட அயர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் பிரதான அனுசரணை வழங்கியுள்ள இந்த வரைவுத் தீர்மானம், மனித உரிமைகள் பேரவையில், நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. இதன்படி, 2015ஆம் ஆண்டில், இலங்கையின் இணை அனுசரணையுடன் சமர்ப்பிக்கப்பட்ட 30/1 என்ற தீர்மானத்தை அமுல்படுத்துவதற்காக, இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முடிவுகளை வரவேற்றுள்ள அந்த வரைவு, மேலும் கணிசமானளவு முன்னேற்றம் தேவைப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. Read more

ssfதிருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிக்குடியிருப்பு மயானத்தில் உள்ள புதைகுழிகளில் ஒன்று தோண்டப்பட்டபோது, அதிலிருந்து சிசுவுக்கு அணிவிக்கின்ற மேலாடையொன்றும் உள்ளாடையொன்றும், சிறு பிள்ளைகளை போர்த்துவதற்குப் பயன்படுத்தப்படும் போர்வையும் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சந்தேகத்துக்கு இடமான அந்த புதைக்குழியை தோண்டுவதற்கான அனுமதியை, மூதூர் நீதிமன்றத்தில் பொலிஸார் கோரியிருந்தனர். அதற்கமைவாக, மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் அந்தப் புதைகுழி, நேற்று தோண்டப்பட்டது. Read more

arjunபிணைமுறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் உள்ள குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவினரிடம் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன வாக்குமூலமளித்து வருகின்றார்.

இவர் இன்று 3ஆவது தடவையாக மத்திய வங்கி பிணைமுறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார். மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே இவர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜரானார். இவர் நேற்று மற்றும் கடந்த வெள்ளிக்கிழமை போன்ற தினங்களில் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆஜராகியமையும் குறிப்பிடத்தக்கது.

arrest (9)ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பங்கேற்ற நிகழ்வு நடைபெறவிருந்த இடத்தில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய யாழ்ப்பாண இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முருகையா சர்மிலன் என்ற முன்னாள் பெண்புலிப் போராளி ஒருவரின் சகோதரர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தாமரை தடாகத்தில் நடைபெறவிருந்த நிகழ்வு ஒன்றுக்கான முன் ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். Read more

south korea forign minதென்கொரியாவின் வெளிவிவகார அமைச்சர் யுன் பயுங் செ இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு இங்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இலங்கை வரும் அவர் மூன்று தினங்களுக்கு இலங்கையில் தங்கி இருப்பாரெனவும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளின் 40 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இந்த விஜயம் இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த விஜயத்தின்போது அவர் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்டவர்களை சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

NPC (4)வடக்கு மாகாண சபையில் இன்று நடைபெற்றிருந்த சிறப்பு அமர்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவநாதன் சபையை அவமதிக்கும் வகையில் செயற்ப்பட்டதாகவும், இதனால் வடக்கு மாகாண சபை அமர்வின் ஆரம்பத்திலேயே குழப்பநிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தால், ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு கொண்டுவந்த பிரேரணை மீதான விவாதத்தின்போதே இந்த குழப்பநிலை உருவாகியுள்ளது. இதன்போது, ஆரம்பத்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட தீர்மானமும் தற்பொழுது அவையில் வழங்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பான அறிக்கையும் மாற்றமாக உள்ளது. Read more