Header image alt text

w1வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக கனடா நாட்டைச் சேர்ந்த வைத்தியர் தனயசிங்கம் பரமனாதன் அவர்களால் தனது பிறந்தநாளை முன்னிட்டு முல்லைத்தீவு முள்ளியவளை 4ம் வட்டாரத்தை சேர்ந்த கடந்த யுத்ததத்தின் போது தனது கைகள் இரண்டையும் கண் ஒன்றையும் இழந்த நிலோசன் றசிதா என்பவருக்கு வாழ்வாதார உதவியாக 40,000 ரூபா வழங்கபட்டுள்ளது.

மேற்படி பயனாளி வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய இப் பயனாளிக்கு தனது பிறந்தநாளை முன்னிட்டு இவ் கைங்கரியத்தை ஆற்றியுள்ள தனயசிங்கம் பரமநாதன் ஜயாவுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினராலும் பயனாளி சார்பாகவும் Read more

ddfdfஇலங்கை இராணுவ படை தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் இராணுவ படை தலைமை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக கடந்த 1ஆம் திகதி ஓய்வு பெற்ற நிலையில் அந்த இடத்திற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

qqமுல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த விசேட தேவையுடையவர்களின் இரு பிள்ளைகளுக்கு புதிய துவிச்சக்கர வண்டிகள் இன்று புதுக்குடியிருப்பில் வைத்து வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி அனுசரணையினை எமது புலம்பெயர் உறவான கனடா நாட்டைச் சேர்ந்த செந்தூரன் காவியா அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு அவரது பெற்றோர் வழங்கியுள்ளனர்.

கல்வியில் ஆர்வமுள்ள பல துன்பங்களின் மத்தியிலும் கல்வி கற்று வரும் தமக்கு தமது கல்வி செயற்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக துவிச்சக்கர வண்டிகளை தந்துதவுமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க புதுக்குடியிருப்பு விசுவமடுவைச் சேர்ந்த விஐதரன் சௌபனா மற்றும் முள்ளியவளையைச் சேர்ந்த சிவகுமார் தர்சினி ஆகிய இரு மாணவிகளுக்கும் ரூபா 31,000 பெறுமதியான இரு புதிய துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. Read more

vavuniyaஐ.நா மனித உரிமை சபை இலங்கை அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது எனக் கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டுவரும் உண்விணாரதப் போராட்டத்திற்கு முன்பாகவே இவ் ஆர்ப்பாட்டம் இன்றுமதியம் இடம்பெற்றுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஐ.நாவே இலங்கை அரசிற்கு கால நீடிப்பை வழங்காதே, சர்வதேசமே எங்களுக்கு தீர்வைத் தா, வழங்காதே வழங்காதே காலநீடிப்பை வழங்காதே, சர்வதேசமே நீதியை புதைக்காதே என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர். Read more

jjjjjஇறுதி யுத்தத்தின்போது சரணடைந்து மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலத்தின் முன்னால் 8ஆவது நாளாகவும், இன்று தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் தமது பிள்ளைகளை மீட்டுத் தருமாறு கோரியும் அரசாங்கத்தக்கு கால அவகாசம் வழங்குவது தமக்கான தீர்வினை கிடைக்கச் செய்வதில் பெரும் சிக்கல் நிலை ஏற்படுத்தும் எனவும் வலியுறுத்துகின்றனர். Read more

nhjhjhகொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயிலுடன் முச்சக்கர வண்டி ஒன்று மோதியதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று பகல் 12.45 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி தச்சன்தோப்புப் பகுதியில் பாதுகாப்பற்ற கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

maithriரஸ்ய அரச தலைவர் விளாடிமிர் புட்டினின் அழைப்பினை மூன்று நாள் விஜயத்தை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்துள்ளார்.

இன்று அதிகாலை 5.45 மணிக்கு ஈ.கே 641 என்ற விமானத்தின் மூலம் ரஸ்யா நோக்கி அரச தலைவர் புறப்பட்டுச் சென்றதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை அரச தலைவர் ஒருவர் நான்கு தசாப்தங்களின் பின்னரே ரஸ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்கின்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

vimal (12)தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பியுமான விமல் வீரவன்ச, சிறைச்சாலைக்கு உள்ளே, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குறறச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பிணை வழங்க கோரிய மனுவை மேல் நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. இந்நிலையில் 73 நாட்களாக தனக்கு பிணை வழங்காமைக்காக விமல் வீரவங்ச உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதாக தேசிய சுதந்திர முண்ணனி தெரிவிக்கின்றது.