Header image alt text

ranilநாட்டைப் பிரிக்காமல் ஒரே நாட்டிற்குள் அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்திற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் கிடைத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அதிகாரத்தை பரவலாக்கும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார். மருதானை சுதுவெல்ல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட பௌத்த சிலை ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைக் கூறியுள்ளார். Read more

maithri (15)கடந்த யுத்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சில விடயங்கள் தொடர்பில் இராணுவத்திற்கும் அரசாங்கத்திற்கும் ஏற்பட்டுள்ள தீர்மானங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்களில் எந்தவொரு இராணுவ வீரர்களையும் பிரதிவாதியாக்குவதற்கு தான் தயாரில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

குருணாகல் பாதுகாப்புச் சேவை வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற மூன்று மாடிக் கட்டிடத்தை திறந்து வைத்தல் மற்றும் இராணுவ வீரர்களுக்கு விருசர சலுகை அட்டைகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைக் கூறியுள்ளார். Read more

sdfsdfsdகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒன்றிணைந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் 22வது நாளாக இன்றும் தீர்வின்றி தொடர்கின்றது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கடந்த 8ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த போரட்டம் இன்றுவரையில் எந்தவித சாதகமான பதில்களும் அற்றநிலையில் தொடர்ந்து செல்கின்றது. இந்நிலையில் 22வது நாளாக போராடி வரும் மக்கள் தமது துன்பத்தை இன்னும் இந்த அரசாங்கம் உணரவில்லை போல என்றும் ஒருநாள் தமது வீட்டில் வந்து அரசாங்க பிரதிநிதிகளை வாழ்ந்து பார்க்குமாறும் அப்போது அன்றாடம் தாம் படும் வேதனைபுரியும் எனவும் கவலையோடு தெரிவித்துள்ளனர். Read more

fort station attackகொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தில் கடந்த 2008ஆம் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலின் போது, விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினருக்கு ஆதரவு வழங்கியதாக கூறப்படும் நபரொருவருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவினை கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் பியசேன ரனசிங்க இன்றையதினம் பிறப்பித்துள்ளார். கனகசபை தேவதாசன் என்ற நபருக்கே இவ்வாறு கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Read more

mangalaஇலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சர்வதேச நீதிபதிகளை உள்வாங்கி விசாரணை செய்யும் தேவை இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்து கருத்துக் கூறிய அமைச்சர், கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 08ம் திகதி சர்வாதிகார ஆட்சி தோற்கடிக்கப்பட்டதுடன், அதனைக் கண்ட உலகமே புதுமைப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

white vanஊடகவியலாளர் கீத் நொயரை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வேன் பிலியந்தலை பிரதேசத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவ மேஜர் புலவத்தகேவுக்கு நெருக்கமான பெண் ஒருவரின் வீட்டில் இருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று குறித்த வேன் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. Read more

sssயாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர்கள், விரிவுரைகளைப் புறக்கணித்து அமைதி போராட்டமொன்றை இன்று முன்னெடுத்துள்ளனர்.

கலைப்பீட முதலாம் வருட மாணவர்களுக்கு, நடத்தப்பட்ட வரவேற்பு நிகழ்வின்போது வன்முறையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தலைவர் உள்ளிட்ட 13 பேருக்கு, வகுப்புத் தடை விதிக்கப்பட்டமைக்கு எதிராகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. Read more