sdfsdfsdகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒன்றிணைந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் 22வது நாளாக இன்றும் தீர்வின்றி தொடர்கின்றது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கடந்த 8ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த போரட்டம் இன்றுவரையில் எந்தவித சாதகமான பதில்களும் அற்றநிலையில் தொடர்ந்து செல்கின்றது. இந்நிலையில் 22வது நாளாக போராடி வரும் மக்கள் தமது துன்பத்தை இன்னும் இந்த அரசாங்கம் உணரவில்லை போல என்றும் ஒருநாள் தமது வீட்டில் வந்து அரசாங்க பிரதிநிதிகளை வாழ்ந்து பார்க்குமாறும் அப்போது அன்றாடம் தாம் படும் வேதனைபுரியும் எனவும் கவலையோடு தெரிவித்துள்ளனர். முள்ளிவாய்க்கால் வரை சென்று குடும்பத்தில் ஒருவரை பலிகொடுத்து அங்கவீனர்களாகி சொத்து இழந்து சுகமிழந்து கடைசியில் பிள்ளைகளையும் இராணுவத்தின் கைகளில் கொடுத்துவிட்டு நிம்மதியிழந்து தவிப்பதாக போராட்டம் மேற்கொண்டுவரும் தாய்மார்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

விரைவில் காணாமல் ஆக்கப்பட்ட எல்லோருக்கும் உரிய பதிலில்லை இந்த அரசு வழங்கவேண்டுமெனவும் நிம்மதியிழந்த வாழ்க்கையை இனியும் வாழமுடியாது எனவும் போராடிவரும் காணாமல் ஆக்கப்படடோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். ஒரே நாட்டிற்குள் அதிகாரம் பகிரப்பட வேண்டும்; இலங்கையர் என்ற அடையாளம் வேண்டும்