maithri (15)கடந்த யுத்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சில விடயங்கள் தொடர்பில் இராணுவத்திற்கும் அரசாங்கத்திற்கும் ஏற்பட்டுள்ள தீர்மானங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்களில் எந்தவொரு இராணுவ வீரர்களையும் பிரதிவாதியாக்குவதற்கு தான் தயாரில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

குருணாகல் பாதுகாப்புச் சேவை வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற மூன்று மாடிக் கட்டிடத்தை திறந்து வைத்தல் மற்றும் இராணுவ வீரர்களுக்கு விருசர சலுகை அட்டைகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைக் கூறியுள்ளார். தாய்நாட்டிற்காக போரிட்ட வீரர்களான இராணுவத்தை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு மற்றும் கடமை என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் இராணுவ வீரர்கள் சம்பந்தமாக தான் எப்போதும் பொறுப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.