Header image alt text

P1420519கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தர்மபுரம் மத்திய கல்லூரிக்கான “பாண்ட்” வாத்திய கருவிகளும், இளம் தாரகை விளையாட்டுக் கழகத்திற்கான விளையாட்டு உபகாரணம்களும்

புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் அவரது பன்முகப்படுத்தப்பட்ட (2016) வரவு செலவு நிதியிலிருந்து

நேற்று (02.03.2017) கண்டாவளை பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கண்டாவளை பிரதேச செயலகம் மேற்கொண்டிருந்தது. Read more

seeniyamottaiஇராணுவத் தலைமையகம் அமைந்துள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் நேற்று ஆரம்பித்த போராட்டம் இன்றும் முன்னெடுக்கப்பட்டது. சீனியாமோட்டை, சூரிபுரம், கேப்பாப்பிலவு ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த 128 குடும்பங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இராணுவத் தலைமையகம் அமைந்துள்ள சுமார் 530 ஏக்கர் காணியை விடுவிக்கக்கோரியே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை, புதுக்குடியிருப்பு இராணுவமுகாம் அமைந்துள்ள 19 ஏக்கர் நிலப்பரப்பு மூன்று கட்டங்களாக விடுவிக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன் கூறியுள்ளார். Read more

sri lanka freedom partyஇந்த ஆண்டு இறுதியில் இடம்பெற உள்ள தேர்தல்களுக்காக சிறீலங்கா சுதந்திரக் கட்சி தயாராகிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று இடம்பெற்ற சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு மற்றும் அகில இலங்கை செயற்குழு கூட்டத்தின் போது இது தொடர்பாக பேசப்பட்டதாக அந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி தூய்மையான அரசியல் இயக்கம் என்ற வகையில் சிறீலங்கா சுதந்திர கட்சி கூட்டணியாக அடுத்த தேர்தல்களில் களமிறங்குவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.

athuraliye rathnaவட மாகாணத்துக்கு, காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்க வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பின் மூலம், தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியும். வட மாகாணத்துக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் போது, படையினரின் அதிகாரம், மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தேசிய பேரவை நிகழ்வின்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.