Header image alt text

cvbcvbvகொழும்பில் பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமொன்றை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பு லோட்டஸ் வீதியை மறித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமையினாலேயே பொலிஸாரினால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சைட்டம் உள்ளிட்ட தனியார் பல்கலைக்கழகங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

fsdfவவுனியா, ஓமந்தை சோதனைச்சாவடி அமைந்திருந்த காணியை, காணி உரிமையாளர்கள் அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் இன்று ஈடுபட்டிருந்தனர்.

கடந்த 20 வருடங்களாக, வடக்கு – தெற்குக்கு செல்லும் பயணிகள் மற்றும் வாகனங்களை சோதனையிடும் பலமான சோதனைச்சவடியாக இது காணப்பட்டது. 18 குடும்பங்களுக்குரிய 41 ஏக்கர் காணியில் இச் சோதனைச்சாவடி அமைக்கப்பட்ட நிலையில், கடந்த ஆட்சிக்காலத்தில் இக்காணிகளை சுவீகரிப்பதற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. Read more

dfgகிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இரு வழக்குகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஆஜர்ப்படுத்தபடும்போது, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவர்கள் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலைசெய்ய திட்டமிட்டனர் என தெரிவிக்கப்பட்டு ஐவர் கைதுசெய்யப்பட்டு, தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வழக்கு, கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு, எடுத்துக்கொள்ளப்பட்டது. Read more

sவவுனியாவில் வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஷெல் ஒன்று விசேட அதிரடிப்படையினரால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஷெல் உலுக்குளம் பகுதியிலுள்ள வெற்றுக்காணியிலிருந்து காணியின் உரிமையாளரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காணியின் உரிமையாளர் தனது காணியினை சுத்தம் செய்து கொண்டிருந்த போது மண்ணில் புதையுண்ட நிலையில் 60 மில்லி மீற்றர் ஷெல்லினை கண்டுள்ளார்.

article_1489406274-1முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் பொதுமக்களின் காணிகளை விடுவிக்க கோரி, பிரதேச மக்கள், நேற்று முன்தினம் முதல் மேற்கொண்டு வரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம் இன்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

அத்துடன், இந்தப் போராட்டம் கவனயீர்ப்பு போராட்டமாக தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், சாந்தி சிறீஸ்கந்தராஜா மற்றும் வட மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் ஆகியோர், அங்கு சென்று மக்களுடன் கலந்துரையாடியிருந்தனர். Read more