Header image alt text

keppapilavuகேப்பாபுலவில் அமைந்துள்ள 279 ஏக்கர் காணிகள், எதிர்வரும் மே 15ஆம் திகதி விடுவிக்கப்படுமென, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம், அமைச்சருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாகவே, கேப்பாபுலவில் உள்ள 279 ஏக்கர் காணியை, மே 15ஆம் திகதிக்கு முன்னர் விடுவிப்பதாக, பாதுகாப்பு அமைச்சு உறுதியளித்துள்ளது. Read more

mahinda samarasingheசர்வதேச விசாரணையின் மூலம் இலங்கை விவகாரங்களில் தீர்வுகாண அரசாங்கம் ஒருபோதும் தயாராக இல்லை. சர்வதேச கண்காணிப்பாளர்களை நாட்டில் அனுமதித்து கடந்த காலத்தில் மோசமான படிப்பினையை பெற்றுள்ளோம் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பொறுப்புக்கூறல் விடயத்தில் சிவில் அமைப்புகளின் பங்களிப்பும் அவசியமானது. மாற்றுக் கருத்துக்களும் முன்வைக்கும்போதே உண்மைகள் வெளிவரும். இலங்கையின் போர்க்குற்ற விடயங்கள் தொடர்பில் உடலாகம அறிக்கை இலங்கை அரசாங்கத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டபோதும் அதன் தரம் தொடர்பில் பாரிய கேள்வி எழுந்தது. Read more

sயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர்களால் நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற உண்ணாவிரத போராட்டத்தில், இரண்டு மாணவர்கள் மயக்கமடைந்த நிலையில் இன்று யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நான்காம், மூன்றாம் வருடங்களைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு மயக்கமடைந்துள்ளனர். முதலாம் வருட மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வின்போது நிகழ்ந்த அசம்பாவிதங்களுக்குப் பொறுப்பானவர்கள் எனத் தெரிவித்து கலைப்பீடம் கலைக்கப்பட்டதுடன், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர்கள் உள்ளிட்ட 13 பேருக்கு காலவரையற்ற வகுப்புத் தடை விதிக்கப்பட்டு விசாரணை இடம்பெற்றுவரும் நிலையிலேயே, இந்த உண்ணாவிரத போராட்டம் மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. Read more

fishingஇலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை எதிர்வரும் 7 ஆம் திகதி இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் இருநாட்டு கடற்றொழில் அமைச்சுக்களினது அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இலங்கை இந்திய கடற்படை மற்றும் கரையோரப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர். Read more

houseஅரசாங்க ஊழியர்களுக்காக 300 புதிய வீடுகளை நிர்மாணிக்க அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. கொழும்பு, மொனராகலை, கம்பஹா மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் புதிய வீடுகளை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நிர்மாணிக்கப்படும் வீடுகளை முன்னுரிமையின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் மாத்திரம் 450 அரச ஊழியர்கள் உத்தியோகப்பூர்வ இல்லத்தைப் பெற்றுக்கொள்வதற்கான காத்திருப்புப் பட்டியில் உள்ளதாக அவர் கூறியுள்ளார். Read more

electric-trainபாதுகாப்பற்ற புகையிரதக் கடவை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இன்றைய தினம் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை ஊழியர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் நிமல் சந்திரசிறி கூறியிருந்தார்.

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கத்தில் இருந்து இதுவரை சாதமகமான பதில் எதுவும் கிடைக்காததன் காரணமாக அவர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எவ்வாறாயினும் தமது கோரிக்கைகள் குறித்து அரசாங்கம் சரியான தீர்வொன்றை வழங்கும் வரையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் நிமல் சந்திரசிறி கூறியுள்ளார்.