Header image alt text

P1420551யாழ் உரும்பிராய் யோகபுரம் ஆதி பராசக்தி அம்பாள் ஆலயத்திற்கு அருகிலுள்ள முன்பள்ளியில் அறநெறிப் பாடசாலை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மேற்படி அறநெறி பாடசாலையினை நடாத்துவதற்கு ஒரு புதிய கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டிவைக்கும் வைபவம் இன்றுகாலை (04.03.2017) நடைபெற்றது.

லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய நம்பிக்கை நிதியத்தினாலும், உரும்பிராயைச் சேர்ந்த லண்டனில் வாழுகின்ற அபிமானிகளாலும் மேற்படி அறநெறி பாடசாலைக் கட்டிடத்தை அமைப்பதற்கான நிதிப் பங்களிப்பு செய்யப்படவிருக்கின்றது. இக்கிராமத்து மக்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்கின்றார்கள். Read more

ssமுல்லைத்தீவு, புதுக்குடியிருப்புப் பகுதியில் தமது நிலங்களை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் தற்போது, 7.5 ஏக்கர் காணி பகுதியளவில் விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அம்மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. புதுக்குடியிருப்புப் பகுதியில் இராணுவத்தினால் அபகரிக்கப்பட்டு, படைமுகாம் அமைக்கப்பட்டுள்ள 19 ஏக்கரையும் விடுவிக்குமாறு, அக் காணியின் உரிமையாளர்களினால், கடந்த 2ஆம் திகதி தொடர்ச்சியான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. Read more

human rightsஇலங்கையில் நீடித்த சமாதானம், நல்லிணக்கம் மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கிய பயணம் மிகவும் மந்தகதியில் இடம்பெறுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை கூறியுள்ளது.

அதேவேளை இலங்கையில் பொறுப்புக்கூறலுக்கான பரந்தளவிலான மூலோபாய வழிமுறை ஒன்று இல்லை என்றும் பேரவை கூறியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹ_சைனிடம் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பிலான அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 22ம் திகதி ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் சயிட் அல் ஹ_சைன் இந்த அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, Read more

dgretreமட்டக்களப்பில் 12ஆவது நாளாக தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டமானது தற்போது மனித சங்கிலி போராட்டமாக மாறியுள்ளது. இன்றயதினம் இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கத்தினர் தங்களது ஆதரவை தெரிவித்ததை அடுத்து இந்த மனித சங்கிலி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன் அரசாங்க அதிபரை சந்திக்க சென்றபோது பட்டதாரிகள் ஏமாற்றமடைந்ததையடுத்து சில அசம்பாவித சம்பவங்கள் இடம்பெற்றிருந்தது. இதைத்தொடர்ந்து பட்டதாரிகளின் இந்த போராட்டத்துக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், பொலிஸாரும் பெருமளவு குவிக்கப்பட்டுள்ளனர்.

DSC06314முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கால்நடை அபிவிருத்தி சங்கத்தினால் நேற்று வாழ்வாதாரத்திற்காக கோழிக்குஞ்சுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இதில் வடமாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன், கால்நடை அபிவிருத்தி உதவி பணிப்பாளர் மற்றும் வைத்திய அதிகாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர். Read more

vanni landகேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி, கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவத் தலைமையகத்துக்கு முன்பாக நேற்று மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த மக்களின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், நேற்று கேப்பாபுலவு கிராமத்தின் பிரதான வீதியை மறித்து அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலைமையக வாயில் முன்பாகவும் வீதியின் மறுமுனையில் பிரதான வீதியில் மறித்து அமைக்கப்பட்டுள்ள காவலரண் முன்பாகவும் புதிய எச்சரிக்கை பெயர் பலகை ஒன்று இடப்பட்டுள்ளது. அதாவது இது “இராணுவ பாசறை அனுமதி இன்றி உட்பிரவேசித்தல் முற்றாக தடை” என மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது.

LTTE partyபுனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் என்னும் கட்சியொன்றினைத் தாம் கடந்த மாதம் 28ஆம் திகதி தொடக்கி வைத்துள்ளதாக, அக்கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராஜா ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். சம்பூர் பத்திரகாளி அம்பாள் ஆலய முன்றலில், நேற்று மதியம் விசேட ஊடக சந்திப்பு நடத்தப்பட்டது.

கட்சியின் தோற்றம் பற்றிப் பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவதற்காகத் தாம் இதனை ஏற்பாடு செய்ததாக, கட்சியின் தலைவர் இன்பராஜ் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, “2009ஆம் வருடம், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 12,000க்கும் அதிகமான போராளிகள் அரசினால் புனர்வாழ்வழிக்கப்பட்டனர். Read more