முகஸ்துதி பாடும் அரசியல் கலாசாரத்திற்கு எதிர்காலத்தில் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சரியான நோக்கம், கொள்கை மற்றும் வேலைத்திட்டமின்றிய அரசியல் கட்டமைப்பாக முன்னோக்கிச் செல்வதற்கு யாருக்கும் இடமளிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டார்.
சிறிலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் விஞ்ஞான கல்வியகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டார்.அறிவு, புத்தி மற்றும் புரிந்துணர்வு ஆகியவற்றுடன் அரசியல் கட்டமைப்புக்காகவே இவ்வாறான அரசியல் விஞ்ஞான கல்விக்கூடம் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
தூய்மையான அரசியல் கட்டமைப்பை கட்டியெழுப்புவதற்கான பிரதான சவாலாக இருப்பதே அரசியல் வாதிகளுக்கு அனுபவம் இன்மையேயாகும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்