Header image alt text

thissa-athanaike2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது, போலி ஆவணங்களைத் தயாரித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, வெளிநாடு செல்வதற்காக நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரியிருந்த நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்றையதினம் அவருக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆராச்சியினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவிலுள்ள தனது மகளைப் பார்ப்பதற்குச் செல்வதற்கே, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, வெளிநாடு செல்லும் கோரிக்கையை முன்வைத்திருந்தார். Read more

policeகடல் மார்க்கமாக, கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்துவதைத் தடுப்பதற்கு, இரவு மற்றும் பகல் நேரங்களில் கடற்படையினரின் ரோந்துப்பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, வடக்கு கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் ஜெயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

யாழ். காங்கேசன்துறை கடற்படைத் தலமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் போதை ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ், முப்படையினரும் இணைந்து பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர். Read more

keppapilavuகேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த கிராமத்தையும் வீடுவாசல்களையும் கையகப்படுத்தி நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அதனை விடுவிக்கவேண்டும் எனக்கோரி முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம் இன்று 33வது நாளாக தொடர்கின்றது.

கடந்த முதலாம் திகதி முதல் கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக கூடாரம் அமைத்து இவர்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எங்களது காணிக்குள் நாங்கள் அடியெடுத்து வைக்கும் வரை எமது போராட்டம் தொடர்ந்து நடைபெறுமென கேப்பாப்புலவில் 33வது நாளாக போராட்டம் நடத்தி வரும் மக்கள் தெரிவித்துள்ளனர். Read more

Mohamed Nasheedஇந்து சமுத்திரத்தில் இலங்கை தனித்துவமான பாத்திரத்தை ஏற்கவேண்டுமெனவும் சிசெல்ஸ், மொரிசியஸ், மாலைத்தீவு உட்பட்ட தீவுகளுக்கும் இலங்கையின் பொருளாதார ஆதிக்கம் தற்போது அவசியமான தேவையாகவுள்ளதாகவும் முன்னாள் மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் நசீட் தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திரத்தில் இலங்கையின் தேவை மற்றும் மாலைத்தீவின் பொருளாதார ஆக்கிரமிப்புக்கள் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

japan shipஜப்பானின் தன்னியக்க பாதுகாப்பு கடற்பாதுகாப்பு படையணிக்கு சொந்தமாக “டெரசுக்கி” கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

தொழில்ரீதியான அனுபவங்களை பறிமாற்றிக் கொள்ளல் மற்றும் இருநாட்டு நற்புறவை வலுப்படுத்தும் நோக்கில் கடற்படை பயிற்சிகள் சிலவற்றில் ஈடுவதன் பொருட்டு குறித்த கப்பல் இலங்கை வந்துள்ளது. Read more

fireயாழ் அளவெட்டி மத்தியில் தந்தையால் தீ மூட்டப்பட்டு கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான யுவதி ஒரு வாரத்தின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சிபெற்று வந்த நிலையில் இவர் உயிரிழந்ததுடன், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அளவெட்டி மத்தியைச் சேர்ந்த குடும்பமொன்றின் ஒரே பெண் பிள்ளையான திருவிளங்கம் ஜெனனி என்ற 27 வயது யுவதியே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். Read more

sports (5)வட மாகாண ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சைக்கிள் ஒட்டப்போட்டி நிகழ்வு இன்றுமுற்பகல் 11மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டு நடைபெற்றது.

இந்நிகழ்வில் விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன், பிரதம மாவட்ட கணக்காளர் ஜெசு ரேஜிநோல்ட், சிரேஸ்ட விளையாட்டு அதிகாரி சதானந்தம் மற்றும் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்ததுடன் இந்நிகழ்வில் ஏனைய விளையாட்டு அலுவலகர்களும் கலந்துகொண்டிருந்தார்கள். Read more

burn house (1)முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள வித்தியபுரம் பகுதியில் தீயினால் தமது வீட்டினையும், நுண்கடன் நிதிப்பணமாக பெற்று வைத்திருந்த 60,000 ரூபாவினையும், தமது உடமைகளையும் இழந்து நிர்க்கதியான காளிதாஸ் சரஸ்வதி குடும்பத்தினரை

வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் அவர்கள் இன்றையதினம் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இவர்களுக்கு மாவட்ட செயலகம் ஊடாக தற்காலிக தரப்பாள் மற்றும் சில சமையல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. Read more

ssddகிளிநொச்சி, இரணைமடு பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்து மரங்களை வெட்டிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் கிளிநொச்சி முகாம் அதிகாரிகள் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களிடம் இருந்த ட்ரெக்டர் மற்றும் மரம் வெட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட மேலும் சில உபகரணங்களும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைக்காக ஒலுமடு வனக் காரியாலயத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

iniya vaalvuஎமது புலம்பெயர் உறவான லண்டன் நாட்டை சேர்ந்த செல்வன் அகிலியன் மோகன் அவர்கள் தனது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று முல்லைத்தீவு மாவட்த்தை சேர்ந்த விழிப்புலன் செவிப்புலனற்ற 54 மாணவர்கள் தங்கி கல்வி கற்றுவரும் இனிய வாழ்வு இல்லத்திற்கு

சிறார்களின் உணவு தேவையை கருத்தில் கொண்டு பருப்பு 20கிலோ சீனி 50கிலோ அரிசி 115கிலோ என்பவற்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். தனது பிறந்ததினத்தை முன்னிட்டு பிள்ளைகளின் உணவு பொருட்களின் தேவையை கருத்தில் கொண்டு உணவு இருப்பை உறுதிசெய்துள்ள செல்வன் அகிலியன் அவர்களுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பாகவும் இல்ல சிறார்களின் சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிக்கொள்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)