Header image alt text

shantha_Bandaraபுதிய அரசியலமைப்பை உருவாக்கும் குழுவின் இடைக்கால அறிக்கையை ஆய்வு செய்ததன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியினால் பிரதான முன்று விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டிருப்பதாக ஸ்ரீPலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறுகையில். Read more

Gotabaya-Rajapaksaவிக்கினேஸ்வரன் இனவாதம் பேசுவதை கண்டுகொள்ளாத அரசாங்கம் எம்மை மாத்திரம் இனவாதிகளாக சித்தரிகின்றனர். பொதுபல சேனாவை போன்றே வடக்கின் இனவாதிகளும் செயற்படுகின்றனர். ஆனால் அவர்களை கைதுசெய்ய மாட்டார்கள், போதுபல சேனா அமைப்பினருக்கும் எனக்கும் இடையில் எந்த தொடர்புகளும் இல்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இடம்பெற்ற மத வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Janasaraaதான் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்க கோரி பொதுபல சேனா அமைப்பின் செயலாளர்; ஞானசார தேரரினால் அடிப்படை உரிமை மனு ஒன்று அவரின் சட்டத்தரணியின் ஊடாக உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தல் சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் திட்டமிடப்பட்ட குற்றப் பிரிவினர், முறையான நடவடிக்கையின்றி தன்னை கைது செய்ய முற்படுவதாக தனது மனுவில் ஞானசார தேரர் கூறியுள்ளார். Read more

hisbullaநாட்டில் இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கும் பேரினவாத குழுக்களை தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், சட்டம் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, தலைசிறந்த புலனாய்வு வலையமைப்பைக் கொண்ட இலங்கை பொலிஸாரினால் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரைக் கைது செய்ய முடியாதுள்ளமை எமக்கு பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். Read more

amachsarவடமாகாண அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு விசாரணைகள் நடந்து கடந்த வடமாகன சபை அமர்வில் அது தொடர்பாக முதலமைச்சரினால் விசாரணை அறிக்கை ஒன்றும் வாசிக்கப்பட்டு இருந்தது அதில் வடமாகாண கல்வி அமைச்சர் த. குருகுலராஜாவும் ஒருவர். இதன் காரணமாகவே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

watterஇலங்கையில் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நிலவும் வறட்சி காரணமாக 2 இலட்சத்து 44 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 8 இலட்சத்து 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

வறட்சி நிலவரம் தொடர்பாக அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள தகவல்களில் வட மாகாணத்தில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 மாவட்டங்களிலும் வறட்சி காரணமாக 2 இலட்சத்து 43 ஆயிரத்து 683 குடும்பங்களை சேர்ந்த 8 இலட்சத்து 49 ஆயிரத்து 752 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு பேரிடர் முகாமைத்துவ மையம் கூறுகின்றது. Read more

malaiyaal pathikapatta makkalin nilaimaikal (2)இலங்கையில் உள்ள சபரகமுவ மாகாணத்தில் வெள்ளம் மற்றும்மண்சரிவு அனர்த்தத்தில் 26 ஆயிரம் மாணவர்கள் தங்களின் கற்றல் உபகரணங்களையும்இ  சீருடைகளையும் இழந்துள்ளனர்.

அண்மைய வெள்ளம் மண்சரிவு அனர்த்தங்களினால் சபரகமுவ மாகாணத்தில் 26 ஆயிரம் மாணவர்களின் பாடப்புத்தகங்கள்இ சீருடைகள் போன்றவை அழிவடைந்துள்ளதாக மாகாண கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. Read more

thipaதமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா திடீரென சென்னை போயஸ் தோட்ட இல்லத்தை மீட்கவே அங்கு வந்திருப்பதாக இல்லத்திற்குள் நுழைய முயன்றதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. Read more

Panneerஅதிமுகவின் இரண்டு அணிகளின் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட 7 பேர் கொண்ட குழுவை கலைத்துவிட்டதாக அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) அணிக்கு தலைமை வகிக்கும், முன்னாள் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். Read more

Ariyalai15யாழ். அரியாலை காந்தி விளையாட்டுக் கழகம் நடாத்திய காந்தி பிறீமியர் லீக் -04 கிறிக்கெட் போட்டி இன்றும் (10.06.2017) நாளையும் (11.06.2017) கால 8.30மணிமுதல் மாலை 6மணிவரை காந்தி விளையாட்டுக் கழகத்தின் தலைவர் திரு. ஸ்ரீகனகராஜரட்ணம் அவர்களின் தலைமையில் யா.கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெறுகின்றது. 
இன்றைய ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர்கள் இ.ஆர்னால்ட், பா.கஜதீபன் மற்றும் யாழ் மாநகரசபை ஆணையாளர் பி.வாகீசன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். 

Read more