கொக்குவில் தாவடி-வடக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள காந்தி கலை வளர்ச்சி மன்றத்தினரால் நடாத்தப்படும் சரஸ்வதிதேவி முன்பள்ளி சிறார்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டி 07-08-2017 அன்று முன்பள்ளி விளையாட்டு மைதானத்தில் சிறப்புற இடம்பெற்றது. பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ த.சித்தார்த்தன் அவர்களும் சிறப்பு விருந்தினராக பிராந்திய முன்பள்ளி கல்வி பணிப்பாளர் திரு கிருபானந்தன் அவர்களும் கலந்துகொள்ள நிகழ்வுக்கு முன்னாள் யாழ் பல்கலைக் கழக பொருளியல்துறை பீடாதிபதி தேவராஐh அவர்கள் தலைமை வகித்திருந்தார். Read more








