இந்திய கடற்றொழில் அதிகாரிகள் மற்றும் கடற்றொழிலாளர் சங்கங்களின் தலைவர்கள் அடங்கிய 9 பேர் கொண்ட குழு இலங்கைக்கு வருகை தந்து 42 இந்திய இழுவை படகுகளை பார்வையிட்டுள்ளனர்.
2015.03.06ம் திகதி இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், இலங்கை அரசாங்கத்தால் சிறைப்பிடிக்கப்பட்ட 42 இந்திய இழுவை படகுகளை இலங்கை அரசாங்கம் அண்மையில் விடுவித்திருந்தது. இந்த படகுகள் தற்போது இந்தியாவுக்கு கொண்டு செல்லக்கூடிய நிலையில் உள்ளதா என்பதை ஆராய்வதற்காகவே மேற்படி 9பேர் கொண்ட குழு இலங்கை வருகை தந்திருந்தது. Read more








