வட மாகாண விவசாய அமைச்சின் மர நடுகை மாதத்தை முன்னிட்டு 21/11/2017 பரசன்குளம் லைக்கா கிராமம் மற்றும் நெடுங்கேணி மருதோடை ஆகிய பிரதேசத்தில் மர நடுகை நிகழ்வு இடவட மாகாண விவசாய அமைச்சின் மர நடுகை மாதத்தை முன்னிட்டு 21/11/2017 இன்று பரசன்குளம் லைக்கா கிராமம் மற்றும் நெடுங்கேணி மருதோடை ஆகிய பிரதேசத்தில் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஜி .ரி .லிங்கநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கிராம அபிவிருத்தி சங்க தலைவர் திரு .டலஸ் , A .சுஜேந்திரா (பாட விதான உத்தியோகத்தர்),கி .சர்மிளா (பாட விதான உத்தியோகத்தர்) ,J.தயாளினி (அபிவிருத்தி உத்தியோகத்தர் ),கோ .நிஷாந்தினி (விவசாய போதனாசிரியர்), M.ராஜ்மோகன் (நிலைய பாதுகாவலர்) மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் 2016 இல் நடைபெற்ற வீட்டு தோட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் இதன் போது பொது மக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது ம்பெற்றது.
