யாழ்ப்பாணம் மானிப்பாய்சோதி வேம்படி வித்தியாசாலையின் பரிசளிப்பு விழா 14.11.2017 பிற்பகல் 2மணியளவில் பாடசாலை மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் திருமதி சுனித்ரா சூரியராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், கௌரவ விருந்தினராக சண்டிலிப்பாய் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு. ச.சிவானந்தராஜா அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டு பாண்ட் வாத்திய இசையோடு அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல், கொடியேற்றல், இறைவணக்கம், வரவேற்பு நடனம், வரவேற்புரை என்பன இடம்பெற்றன. Read more








