Header image alt text

பிரதான கோரிக்கைகள் நான்கினை முன்வைத்து நாளை மாலை 4 மணியின் பின்னர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக புகையிரத சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

புகையிரத இயந்திர சாரதிகளின் சேவை காலத்தினை நீடிக்காமை, புதியவர்களை பணியில் இணைத்துக்கொள்ளாமை உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை முன்வைத்தே இவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுத்தமான பசுமை மாநகரம் எனும் தொனிப்பொருளில் யாழ். மாநகர சபையின் தேர்தல் விஞ்ஞாபனத்தினை இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் வழங்கி வெளியிட்டு வைத்தார்.

குறித்த நிகழ்வு இலங்கை தமிழரசு கட்சியின் இணைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நல்லூர் இளங்களைஞர் மண்டபத்தில் நேற்றுமாலை இடம்பெற்றது. இத் தேர்தல் விஞ்ஞாபனத்தினை வடமாகாண அவைத் தலைவரும், தமிழரசுக் கட்சியின் இணைத்தலைவருமான சீ.வி.கே.சிவஞானம் ஆதரவாளர்கள் மத்தியில் வாசித்து மக்களுக்கு வெளிப்படுத்தினார். Read more

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் 12ம் வட்டாரத்திற்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் திரு. இ.குமாரசாமி அவர்களின் தேர்தல் பரப்புரை கூட்டம் நேற்று(22-01-2018) யாழ். சுன்னாகம் மின்சாரநிலைய வீதியிலுள்ள கலைவாணி சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது.

இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் தலைவருமான கௌரவ த.சித்தார்த்தன், வடமாகாணசபையின் உறுப்பினர் திரு. பா.கஜதீபன் மற்றும் வேட்பாளர் இ.குமாரசாமி ஆகியோர் கலந்துகொண்டு அப்பிரதேச மக்களுக்கு இத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றியின் அவசியம் குறித்து விளக்கினர். Read more

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் அதிசயமான குடிசையொன்று மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த குடிசையானது தாய்லாந்து நாட்டு மக்களால் உருவாக்கப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

தாய்லாந்து மக்கள் தமது மூதாதையருக்கு பிதிர்க்கடன் செய்யும்போது தாம் வசிக்கும் வீட்டை ஒத்த வீடொன்றை உருவாக்கி கடலில் மிதக்கவிடுவது அவர்களின் வழக்கமாக இருந்து வருகின்றது. அவ்வாறானதொரு மூங்கில்களால் உருவாக்கப்பட்ட குடிசையொன்று இவ்வாறு கடலில் மிதந்து வந்துள்ளது. Read more

இலங்கையின் பிரபல பொப் இசை பாடகரான சிலோன் மனோகர் என்றழைக்கப்படும் ஏ.இ.மனோகரன் சென்னை திருவாண்மையூர் கந்தன்சாவடியில் நேற்றிரவு 7.20மணியளவில் காலமானார்.

ஏ.இ.மனோகரன் இலங்கையைச் சேர்ந்த புகழ்பெற்ற பொப் இசைப் பாடகரும் திரைப்பட நடிகரும் ஆவார். பல மொழிப் பாடல்கள் பாடுவதிலே திறமை வாய்ந்தவர். இவர் பொப் இசைச் சக்கரவர்த்தி எனப் பாராட்டுப் பெற்றவர். இவருக்கு இலங்கை மட்டுமன்றி தமிழகம் உள்ளிட்ட உலகில் தமிழர்கள் வாழும் அனைத்துப் பகுதிகளிலும் இரசிகர்கள் உள்ளனர். Read more

இலங்கை விவசாயத்துறையின் அபிவிருத்திக்கு பல்வேறு புதிய நிகழ்ச்சித் திட்டங்களின் ஊடாக உதவி வழங்க எதிர்பார்த்துள்ளதாக, தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தாய்லாந்தின் இலங்கைக்கான புதிய தூதுவர் சூலமனி சட்சுவான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, Read more

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங் இன்று மாலை இலங்கை வந்தடைந்துள்ளார். 35 தூதுவர்கள் அடங்கிய குழுவொன்றுடனேயே அவர் இலங்கை வந்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று, இலங்கை வந்துள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதோடு, சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

கொழும்பில் உள்ள அமெரிக்க நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறைநிரப்பு பிரேரணை நிறைவேற்றப்படாமை காரணமாக அமெரிக்க அரசாங்கம் முடங்கியுள்ளமை இதற்கு காரணமாகும்.

மறு அறிவத்தல் வரை குறித்த நிலையம் மூடப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கடவுச்சீட்டு மற்றும் வீசா சேவைகள், தூதரகத்தின் ஊடாக தொடர்ந்தும் இடம்பெறும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்கள் நான்கு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மூன்றாம் வருட மாணவர்களான அவர்கள், கடந்த வாரம் வியாழக்கிழமை இரவு, 4ம் வருட மாணவர்கள் இருவரை தாக்கியதாக குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் இன்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 25ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அவர்கள் சார்பில் பிணைக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்ட போது, நீதவான் அதனை நிராகரித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மன்னார் – பள்ளிமுனை கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவருடைய மீன் வாடி ஒன்றில் நேற்றிரவு திடீர் என ஏற்பட்ட தீயின் காரணமாக பல இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது.

பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த சுமந்தன் என்ற மீனவரது வாடியே எரிந்து சாம்பலாகியுள்ளது. இதன்போது மீன்பிடி படகின் வெளி இணைப்பு இயந்தியம், மீன் பிடி வலைகள் உட்பட சுமார் 9 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் இவ்வாறு எரிந்து சாம்பலாகியுள்ளதாக மீனவர் கவலை தெரிவித்தார். Read more