Header image alt text

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றத்தை உருவாக்க, தமது நாட்டின் அரசாங்கம் ஆதரவளிக்காது என்று ஜப்பான் தெரிவித்துள்ளது. ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் கெனிச்சி சுகுமா இதனை நேற்று தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச நீதித்துறையினரின் பங்களிப்புடன் விசேட நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று ஜெனீவா 2015 தீர்மானத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆயினும் இதற்கு ஜப்பானிய அரசாங்கம் ஆதரவளிக்காது. Read more

முன்னாள் பாதுகாப்பு செயலாளர், கோட்டாபாய ராஜபக்சவை கைது செய்வதற்கு எதிரான தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. பொதுச் சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்து, பாரிய நிதி மோசடி செய்துள்ளதாக கோட்டாபாய ராஜபக்ச மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், தன்னை கைது செய்வதனை தடை செய்யுமாறு கோரி கோட்டாபாய ராஜபக்ச தடையுத்தரவு பெற்றுக்கொண்டிருந்தார். இந்நிலையில் குறித்த தடையுத்தரவு எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் நீடிக்கப்பபட்டுள்ளது.

யாழ் மணியந்தோட்டம் பகுதியில் இளைஞரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கடந்த 5 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இருவருக்கும் நிபந்தனையுடனான பிணை வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று இந்த அனுமதியை வழங்கியுள்ளது. 2017 ஒக்ரோபர் 22ம் திகதி அரியாலை கிழக்கு மணியம்தோட்டம் வசந்தபுரம் முதலாம் குறுக்கு வீதியில் 24 வயதான ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் பலியானார். Read more

மூன்று மீனவர்களுடன் முல்லைத்தீவு நாயாறு கடற்பகுதியிலிருந்து கடற்றொழிலுக்காக சென்று காணாமல் போன கடற்றொழில் படகு தமிழக கடலூரில் மீட்கப்பட்டுள்ளது. இதனை தமிழக கடலோர பாதுகாப்பு காவற்துறை தெரிவித்துள்ளது.

எனினும், அந்த படகில் மீனவர்களோ, அல்லது எந்தவித கடற்றொழில் சாதனங்களோ இருக்கவில்லை என அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 12 ஆம் திகதி சிலாபம் பகுதியை சேர்ந்த 3 கடற்றொழிலாளர்கள், முல்லைத்தீவு நாயாறு கடல் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்காக சென்றனர். Read more

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்ததாக நம்பப்படும் இடத்தில் தங்கம் தேடி அகழ்வு நடவடிக்கை ஒன்று கடந்த 20ம் திகதி முன்னெடுக்கப்பட்டு, முடிவுறாத நிலையில் இன்று மீண்டும் தோண்டுவதற்கு திகதி குறிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று காலை 8 மணி முதல் புதுக்குடியிருப்பு பொலிசார், நீதிபதி, அரச அதிகாரி, படைஅதிகாரி, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் பிற்பகல் 2 மணிவரை சுமார் 6 மணித்தியாலங்கள் தோண்டியும் எதுவும் கிடைக்கவில்லை. Read more

யாழ். சங்கானையில் ஆலயக் குருக்களைத் துப்பாக்கிச் சூடு நடாத்தி கொலை செய்து அவரது பிள்ளைகளைக் காயப்படுத்திவிட்டு ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்ற குற்றத்துக்கு இராணுவச் சிப்பாய் உள்ளிட்ட மூவருக்கு மரணதண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்று இன்று தீர்ப்பளித்துள்ளது. தானியங்கித் துப்பாக்கியைப் பயன்படுத்தியமைக்கு எதிரிகள் மூவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.

குருக்கள் மற்றும் அவரது பிள்ளைகளை சுட்டு படுகாயப்படுத்தியமைக்கு மூன்று எதிரிகளுக்கும் தலா 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது” என்று மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தண்டணைத் தீர்ப்பை வழங்கினார். Read more

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நேற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்நிகழ்வு வவுனியா நகரசபையின் கலாச்சார மண்டபத்தில் வைத்தியக்கலாநிதி சத்தியலிங்கம் அவர்களின் தலைமையில் நேற்றுமாலை நடைபெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சாந்தி சிறீஸ்கந்தராஜா, வைத்தியக்கலாநிதி சிவமோகன், மாகாணசபை அமைச்சர் க.சிவநேசன் உள்ளிட்டவர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் முன்னிலையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது. Read more

யாழ்ப்பாணம், கிளிநோச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நேற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிகழ்வு நல்லூர் இளங்கலைஞர்

மன்றத்தில் வடமாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் அவர்களின் தலைமையில் நேற்று காலை நடைபெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், ஈ.சரவணபவன் உள்ளிட்டவர்கள் மற்றும் மாகாண சபையின் உறுப்பினர்கள் முன்னிலையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது. Read more

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவால் சபாநாயகர் கருஜயசூரியவிற்கு கையளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் அலுவலகத்தில் வைத்து குறித்த பிரேரணையை கையளிக்கப்பட்டுள்ளது. இதில் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ள நிலையில், அதில் 51 பேர் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களாவர். Read more

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளைய தினம் பாகிஸ்தான் செல்லவுள்ளார். பாகிஸ்தான் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் இடம்பெறவுள்ளது.

இந்த விஜயத்தின் போது பாகிஸ்தான் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடவுள்ளதாக கூறப்படுகிறது.