யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த மொழிபெயர்ப்பு கற்கைகள் பாடநெறிக்கான தெரிவுப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த பரீட்சை இடம்பெறும் திகதி தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.
அண்மையில் விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு மயிலிட்டி 683 ஏக்கர் காணிகளில் மீள்குடியேற்றம் செய்வதற்கு ஆயிரத்து 600 மில்லியன் ரூபா தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வவுனியா ஓமந்தைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செட்டிகுளம் பகுதியில் 2ஆம் படிவத்தில் வசிக்கும் பாலசுந்தரம் நிரோசனே விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக அலைனா பி டெப்பிளிட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த நியமனத்தை மேற்கொண்டுள்ளார்.
சட்டவிரோதமாக ஒரு தொகை ரூபாய்களை நாட்டிலிருந்து கொண்டு செல்ல முற்பட்ட இந்திய கணக்காய்வு அதிகாரி ஒருவர் கட்டுநாயக்க வானுர்தி தள சுங்க தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை நோக்கி அச்சுறுத்தும் விதத்தில் சைகை செய்து சர்ச்சையில் சிக்கிய பிரிட்டனிற்கான இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி பிரியங்கர பெர்ணான்டோ குறித்து பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் மீண்டும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் எஸ்.அமல நாதன் தெரிவித்தார்.
இராணுவமயமான ஆட்சி ஒன்றை மீண்டும் உருவாக இடமளிக்கமுடியாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
புதையல் தோன்றுவதற்கு முயற்சி செய்தவர்கள் எனும் சந்தேகத்தின்பேரில் ஏழு பேர் தர்மபுரம் பொலிஸாரால் நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்டர் ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில் இன்றுகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.