மத்திய மாகாணத்திலும் நீடித்துவரும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு இரவு வேளையில் சிவனொளிபாத மலைக்குச் செல்வதற்கு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிகத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நல்லதண்ணி வனவிலங்குத் திணைக்கள அதிகாரி ஏ.ஆர்.பி.ஏ.கருணாதிலக்க தெரிவித்தார். Read more
லண்டனில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு இலங்கையர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
காணமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலகொடவின் மனைவி சந்தியா எக்னெலகொடவை அச்சுறுத்திய குற்றச்சாட்டிற்காக கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக ஒலுவில் வளாக பிரதான வீதிக்கு அருகில் இன்று மாலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியாவில் இன்றுகாலை புதிய பேருந்து நிலையத்தில் 4கிலோ கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் தூத்துக்குடியில் இடம்பெற்று வரும் கலவரத்தினைக் கட்டுப்படுத்த இந்திய இராணுவம் தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் கடந்த இரண்டு நாட்களாக ஸ்டெர்லைட் ஆலையினை மூடக்கோரி போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
உயர் நீதிமன்ற நீதியரசர் ஈவா வனசுந்தர, பதில் பிரதம நீதியரசராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கு மாவா போதைப்பொருள் விற்பனை செய்த இரு இளைஞர்கள்களை வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் கைது செய்துள்ளனர்.
பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம், இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கிய உதவிகள் தொடர்பான விவரங்கள் அடங்கிய சுமார் 200 ஆவணங்களை (கோப்புகள்) அழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. அதேநேரம் நாட்டின் 18 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் 11,723 குடும்பங்களை சேர்ந்த 44,745 பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.